செய்திகள் :

``14 வருஷம் ஆயிருச்சு, ஆனா இன்னும்...'' - தந்தை மலேசியா வாசுதேவன் குறித்து யுகேந்திரன் உருக்கம்

post image
தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் மலேசியா வாசுதேவன்.

‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ எனப் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார் இந்த மலேசியா வாசுதேவன். அதன் பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துங்கள் பாடுங்கள்' என்ற பாடலும் அவரை எட்டா உயரத்துக்கு அழைத்துச் சென்றது. ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய இவர் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி இறந்தார். 

மலேசியா வாசுதேவன் - இளையராஜா

நேற்று அவருக்கு 14-வது ஆண்டு நினைவு தினம். இந்நிலையில் அவரது மகனும், பாடகரும், நடிகருமான யுகேந்திரன் தனது தந்தை மலேசியா வாசுதேவன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “அச்சா, நீங்கள் இறந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் உங்களை நினைக்காத நாளில்லை. பல நினைவுகள் இருக்கின்றன.

சில நினைவுகள் என்னை சிரிக்க வைத்திருக்கிறது. சில நினைவுகள் என்னை அழுக வைத்திருக்கிறது. நான் தினமும் உங்கள் பாடல்களைக் கேட்கிறேன். அதைக் கேட்கும்போது சில சமயங்களில் சோகமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் உங்கள் கூட இருப்பதுபோல் அந்தப் பாடல்கள் உணர வைக்கும்.

உங்கள் குரலையும், உங்களுடன் இருந்தபோது கிடைத்த அழகிய தருணங்களையும் நினைத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். அப்பா- மகன் உறவைத் தாண்டி நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் அச்சா” என்று பதிவிட்டிருக்கிறார்.   

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Fire: "உன்னை உடைக்கிற நாள்கள்தான் உன்னை உருவாக்கும் நாள்கள்..” - வைரலாகும் பாலாஜி முருகதாஸின் பதிவு

பிக் பாஸ் தமிழ் சீசன் நான்காவது நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக தேர்வான பாலாஜி முருகதாஸ் தற்போது ‘ஃபயர்’ படத்தில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப்... மேலும் பார்க்க

Dragon: "உங்களில் ஒருவனாக என்னை இங்கு நிற்க வைத்ததற்கு நன்றி..." - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் நேற்று (பிப்ரவரி 22) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.`லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் ... மேலும் பார்க்க

`திராவிடர் கழகப் பெண்ணுக்கும், பாஜக ஐ.டி விங் பையனுக்குமான காதல் கதை அது!' - தியாகராஜன் குமாராராஜா

யுகபாரதி எழுதிய `மஹா பிடாரி' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரும் பங்கேற்று உரையாற்றினர். நூல் வெளியீட்டு விழாவின் காணொளிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சினிமா விகடன்... மேலும் பார்க்க

Amaran 100 : `` `நல்லப் படம் இல்லைனு தெரிஞ்சும் பண்றியா'னு எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை!" - கமல்ஹாசன்

கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நிரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தி... மேலும் பார்க்க

Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா...' அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்'?

தன் வாழ்க்கையின் நலனுக்காக எந்தத் தவற்றையும் செய்யத் துணியும் இளைஞன், அதன் விளைவுகளை உணரும் கமெர்ஷியல் பயணமே இந்த 'டிராகன்'.48 அரியர்களுடன் கல்லூரியில் கெத்தாகத் திரிந்த 'டி. ராகவன்' என்கிற 'டிராகன்' ... மேலும் பார்க்க