செய்திகள் :

`₹15,000 கோடி முதலீடு; 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு' -தமிழக அரசு அறிவிப்பு; foxcon நிறுவனம் மறுப்பு

post image

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்த சந்திப்பின்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ₹15,000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதாக தமிழக அரசு அறிவித்தது.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "₹15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அப்படி எந்தவொரு புதிய ஒப்பந்தமும் போடப்படவில்லை என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்திருக்கிறது.

foxcon நிறுவனம்
ஃபாக்ஸ்கான்

இதுதொடர்பான 'TOI' செய்தி நிறுவனத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் அளித்திருக்கும் விளக்கத்தில், "ஃபாக்ஸ்கானின் புதிய இந்தியப் பிரதிநிதியான ராபர்ட் வூ மற்றும் அவரது குழு, தமிழ்நாடு முதல்வர் அவர்களை முதல்வரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது புதிய முதலீடுகள் குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.

தமிழ்நாட்டில் ₹15,000 கோடி முதலீடு செய்வது என்பது புதிய ஒப்பந்தம் இல்லை. அது ஏற்கனவே கடந்த ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம்தான். அதன்பிறகு தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்பாக எந்தவொரு புதிய ஒப்பந்தமும் போடப்படவில்லை" என்று தெளிவுபடுத்தியிருக்கிறது ஃபாக்ஸ்கான்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தினர் - முதல்வர் ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தினர் - முதல்வர் ஸ்டாலின்

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளாகி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏமாற்றி வருவதாக பாமக அன்புமணி, பாஜக அண்ணாமலை, அதிமுக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர்.

``இந்தி மொழிக்கு தடையா? வதந்திகளைப் பரப்பாதீர்கள்" - TN Fact check

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களிலும் மத்திய பா.ஜ.க அரசு இந்தி மொழியை திணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணிக்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், இரு... மேலும் பார்க்க

மதுரை: மேயர் இந்திராணி ராஜினாமா!

மதுரை மாநாகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசரணையை தொடங்கியது. இந்த வழக்கில் மாநகராட்சி பி... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "தனிநபர் மீது பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள்தான் அனலாகப் பறந்தன.இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித... மேலும் பார்க்க

``கரூர் சம்பவத்தில் விரைவாக உடற்கூராய்வு நடத்தியது ஏன்?'' - இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் மா.சு பதில்

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள்தான் அனலாகப் பறந்தன. எதிர்கட்சித் தலைவர் அதிமுக எடப்பாடி ... மேலும் பார்க்க

தீபாவளி விடுமுறை: "தென் மாவட்டங்களுக்கு பகல் நேர முன்பதிவில்லாத மெமு ரயில்கள்" - பயணிகள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குப் பகல் நேர, முன்பதிவில்லாத சேர் கார் வசதி கொண்ட மெமு (Memu) சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தீபாவ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு

தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார். இவர் கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்துபோன வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாரையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும்... மேலும் பார்க்க