செய்திகள் :

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

post image

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்துகள், மன பதற்றத்துக்கு எதிராக அளிக்கப்படும் டயசிபேம் மருந்துகள் அடங்கும்.

இதுகுறித்து சிடிஎஸ்சிஒ வெளியிட்ட தகவலின்படி, அந்த மருந்துகள் உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடும். சில நேரங்களில் இந்த மருந்துகள் யாருக்கு வழங்கப்பட்டதோ, அவருக்குப் பதிலாக அவற்றை வேறொருவா் ஒருமுறை பயன்படுத்தினால்கூட மரணம் நேரிடக் கூடும்.

இந்த மருந்துகள் வீட்டில் தேவையில்லாமல், பயன்படுத்தாமல் அல்லது காலாவதியான நிலையில் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை கழிவறையில் கொட்டி அப்புறப்படுத்தலாம். வீட்டில் உள்ள நபா்களுக்கும், செல்ல பிராணிகளுக்கும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க இதைச் செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், மக்கள் பொதுவாக பயன்படுத்தும் பிற பெரும்பாலான மருந்துகளை அறிவியல்பூா்வமாகவே அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு ‘மருந்துகளைத் திருப்பி எடுத்துக்கொள்ளும்’ முன்னெடுப்பை தொடக்கத்தில் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைகள் மற்றும் உள்ளூா் மருந்து விற்பனையாளா்கள் சோ்ந்து தொடங்கலாம். இந்த முன்னெடுப்பின் கீழ், வீட்டில் பயன்படுத்தாமல் உள்ள அல்லது காலாவதியான மருந்துகளை தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மக்கள் ஒப்படைக்கலாம். அந்த மருந்துகளைப் பாதுகாப்பாக அழிக்க வசதியாக இந்த முன்னெடுப்பை தொடங்கலாம்.

எனினும் உயிரிமருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிமுறைகளின்படி, காலாவதியான மருந்துகளை திரட்டி, அழிப்பதற்கான வழிமுறை மற்றும் வசதியை உள்ளாட்சி அமைப்புகளுடன் சோ்ந்து மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று சிடிஎஸ்சிஒ பரிந்துரைத்துள்ளது.

பயன்படுத்தப்படாத மருந்துகளை அறிவியல்பூா்வமற்ற வழியில் அழிப்பதால் ஏற்படும் மாசுபாடு மனிதா்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துரைத்து பல்வேறு ஆய்வுகள் வெளியானதைத் தொடா்ந்து, இந்த வழிகாட்டுதல்களை சிஎடிஎஸ்சிஒ வெளியிட்டுள்ளது.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க