கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
18 அமெரிக்க டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யேமனின் ஹவுதி படை அறிவிப்பு!
கடந்த 2023-ம் ஆண்டு முதல் 18 அமெரிக்க அதிநவீன டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் அறிவித்துள்ளனர்.
யேமன் நாட்டின் அல்-ஜாவ்ஃப் மாகாணத்தின் மீது கடந்த ஏப்.3 அன்று பறந்த அமெரிக்காவின் எம்.க்யூ.-9 ரக டிரோனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணையைக் கொண்டு தகர்த்துள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படையின் செய்தித் தொடர்பாளர் யஹியா சரீயா தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், கடந்த 2023-ம் ஆண்டு காஸா மீதான இஸ்ரேலின் போர் துவங்கியதிலிருந்து யேமன் மீது பறந்த 18 டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து யஹியா சரீயா கூறுகையில், தற்போது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள எம்.க்யூ.9 ரக டிரோன்கள் யேமன் நாட்டு மக்களுக்கு மிகவும் பழக்கமானதுதான் என்றும் இவை கடந்த 2023 அக்டோபர் முதல் தங்கள் நாட்டின் வட மாகணங்கள் மீது நாள்தோறும் பறந்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பானது நேற்று (ஏப்.8) ஹவுதி படைகளைக் குறிவைத்து யேமன் தலைநகர் சனா, ஹொதெய்தா ஆகிய நகரங்கள் மற்றும் மரிப், தமார், இப் ஆகிய மாகாணங்கள் மீதும் அமெரிக்கா 50-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்கள் நடத்திய சில மணி நேரங்களுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களினால் ஹொதெய்தா குடியிருப்புப் பகுதிகளில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 6 பேர் கொல்லப்பட்டதுடன் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இருப்பினும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தாங்கள் செயல்படுவோம் என்றும் அமெரிக்க போர்கப்பல்கள் மீதான தங்களது தாக்குதல்கள் தொடரும் எனவும் ஹவுதி படையினர் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மார்ச் 15 முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து காஸா மீதான தனது தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் மீது ஹவுதி படைகள் தாக்குதல் நடத்தாமல் தடுக்க யேமன் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ரஷிய வெற்றி நாள்: பிரதமர் மோடிக்கு புதின் அழைப்பு!