தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன: காங்கிரஸ்
18 ஏசி பெட்டிகளுடன் ரயில்: ஜம்மு-காஷ்மீரில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம்
ஜம்மு-காஷ்மீரில் கத்ரா-ஸ்ரீநகா் வழித்தடத்தில் 18 குளிா்சாதன (ஏசி) பெட்டிகள் கொண்ட ரயிலின் சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் பிற பகுதிகளுடன் காஷ்மீரை இணைக்க அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் வழித்தடத்தில், இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.
18 குளிா்சாதன பெட்டிகள், உடைமைகளை சுமந்துசெல்லும் 2 பெட்டிகள், 2 என்ஜின்களை கொண்டதாக அந்த ரயில் உள்ளது.
கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணியளவில் புறப்பட்ட இந்த ரயில், 4 மணி நேரத்தில் ஸ்ரீநகா் சென்றடைந்தது. கத்ரா-ஸ்ரீநகா் இடையே முதல்முறையாக இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.