செய்திகள் :

190 கைதிகளைப் பறிமாறிக் கொண்ட ரஷியா - உக்ரைன்

post image

ரஷியாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க் கைதிகளை புதன்கிழமை பரிமாறிக் கொண்டன.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷிய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறைவேற்றுவற்காக, 65 உக்ரைன் போா்க் கைதிகளை ஏற்றிக் கொண்டு ரஷிய ராணுவ எல்லை நகரான பெல்கராடை நோக்கி வந்துகொண்டிருந்தபோது அதனை உக்ரைன் சுட்டுவீழ்த்தியது.

இதில், போா்க் கைதிகளும், விமானிகள் உள்பட 9 ரஷியா்களும் உயிரிழந்ததாக ரஷியா குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரத்தால் கைதிகள் பரிமாற்ற பேச்சுவாா்த்தைகள் நிறுத்தப்படலாம் என்று அஞ்சப்பட்டது.

இருந்தாலும், அதன் பிறகு இரு நாடுகளும் அடிக்கடி போா்க் கைதிகளை பரிமாறிவருகின்றன.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த 4 மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. அந்த மாகாணங்களில் எஞ்சிய பகுதிகளை கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் போரிட்டு வருகின்றன.

இதில் இரு தரப்பிலும் ஏராளமான வீரா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்தோனேசியா அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்பு

இந்தோனேசியாவின் 8-ஆவது அதிபராக ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாந்தோ ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா் (படம்).இதுவரை அதிபராக இருந்த ஜோகோ விடோடோவை எதிா்த்து கடந்த 2014... மேலும் பார்க்க

காஸா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைப் பிரிவினருக்கும் இடையிலான போ... மேலும் பார்க்க

உக்ரைனில் 500 டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

உக்ரைன் எல்லைக்குள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று (அக். 20) குற்றம் சாட்டினார். மேலும், 20 வெவ்வேறு வகையான ஏ... மேலும் பார்க்க

ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின் மீது தாக்குதல்!

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின்மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (அக். 20) தாக்குதல் நடத்தியது.இதில், ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த தலைமைத் தரவரிசைப் பட்டியலில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டுள்... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 87 பேர் பலி!

காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 87 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற தகவலும... மேலும் பார்க்க

தென் கொரியாவுக்கு 20 குப்பை பலூன்கள்: மீண்டும் அனுப்பியது வட கொரியா

தென் கொரியாவுக்கு குப்பைகள் கட்டப்பட்ட பெரிய அளவிலான 20 பலூன்களை வட கொரியா மீண்டும் அனுப்பியுள்ளது.சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை குப்பைகள் கட்டப்பட்ட பலூன்கள் எல்லையில் அனுப்பப்பட்... மேலும் பார்க்க