செய்திகள் :

"2ஜி வழக்கில் எந்த சிபிஐ வழக்குப் பதிந்ததோ அதே சிபிஐ-யை தண்ணீர் குடிக்க வைத்தேன்" - ஆ.ராசா பேச்சு

post image

புதுக்கோட்டையில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஆ.ராசா
ஆ.ராசா

அப்போது, பேசிய அவர், "இந்த மேடையில் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிகம் வந்துள்ளனர். அரசியல் மேடையைப் பார்த்தால் அதற்கேற்ப பெருமையும், சிறுமையும் உண்டு.

துன்பம் உண்டு, துயரம் உண்டு. 2 ஜி வழக்கில் சிறைக்கே போய்விட்டு வந்தவன். உச்சத்தைத் தொட்டவன். அதற்குப் பிறகு மீண்டு வந்து எந்த சி.பி.ஐ. என் மீது வழக்குப் போட்டதோ அந்த சி.பி.ஐ-யைத் தண்ணீர் குடிக்க வைத்தவன்.

எல்லாம் இருந்தாலும் கூட அரசியலிலும் ஏறுதலும், இறங்குதலுமாக இருக்கும். ஆனால், இந்த மேடையில் மாணவர்களைப் பார்க்கும் போது என்னுடைய இளமைக் காலம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

தி.மு.க-வுக்கு மாற்று வேண்டும் எனக் கூறி வருகின்றனர். திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்கின்றனர். நடிகர் எல்லாம் வந்துவிட்டார். திராவிட இயக்கங்களுக்கு கலைஞர் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக கை ரிக்‌ஷா வைத்திருப்பவர்களுக்குச் சைக்கிள் ரிக்‌ஷா வழங்கியவர் கலைஞர். அவரது ஆட்சியில் செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். பெண்களுக்குச் சொத்தில் உரிமைச் சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.

உள்ளாட்சியில் முதலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் கொண்டு வந்தார். தற்போது, 50 சதவிகிதமாக உள்ளது. பெண்கள் சைக்கிள் ஓட்டுவதற்கே அந்தக் காலத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இன்று விமானத்தில் பைலட்டே பெண்கள் பலர் இருக்கின்றனர்.

இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தது எது, திராவிட இயக்கம். நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரி கிடையாது. நம்முடைய தாய் மொழி தமிழுக்குச் செம்மொழி என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்.

நாடாளுமன்றத்தில் எதையெல்லாம் வேணும் என்று தீர்மானம் போடுவதை நாங்கள் சட்டசபையில் வேண்டாம் என்று தீர்மானம் போடுகிறோம்.

ஆ.ராசா
ஆ.ராசா

நாங்கள் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த துணிச்சல், இறுமாப்பு எங்கிருந்து வருகிறது என்றால் திராவிட சித்தாந்தம், பெரியார், அண்ணா கொள்கைகளைக் கடைப்பிடிப்பதால், எங்கள் மொழியை, இனத்தை நேசிப்பதால் உங்களை நாங்கள் மதிப்பதே இல்லை.

உங்கள் சமஸ்கிருத தத்துவம் பிடிக்கவில்லை. தனித்த அடையாளத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காகத் திராவிட சித்தாந்தம். இந்தச் சித்தாந்தத்தை உலகம் முழுவதிற்கும் இன்று பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய 3 பேரின் மொத்த வடிவமாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`முருகன் இருக்கும் மலைகளெல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது!' - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

மதுரையில் வரும் ஜூன் 22 அன்று இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் கண்காட்சி தொடங்கப்பட்டது, இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிர... மேலும் பார்க்க

Stalin-க்கு நெருக்கடி தரும் Thiruma? Vijay-யுடன், Anbumani டையப்? | Elangovan Explains

'மன்னிச்சிடுங்க ஐயா' என ஓபனாகவே கேட்ட அன்புமணி ஆனாலும் சந்தேகிக்கும் ராமதாஸ். ஒருபக்கம் 123 பேர்களை மாற்றிய ராமதாஸ் இன்னொரு பக்கம் அவர் பிறந்தநாளிலேயே நடைபயணம் திட்டமிட்ட அன்புமணி. அட்டாகை, அமைதியாக ட... மேலும் பார்க்க

Iran vs Israel: `தெஹ்ரானிலிருந்து வெளியேறுங்கள்..!" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் அணுசக்தியை உருவாக்குவதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்திவருகிறது. அதற்கு ஈரான் ராணும் பதிலடி கொடுக்கிறது. இருதரப்பிலிருந்தும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. புலம்பெயர்த... மேலும் பார்க்க

`ரஷ்யாவுக்காக களமிறங்கிய வடகொரிய வீரர்கள் 6000 பேர் பலி’ - பிரிட்டிஷ் உளவுத்துறை கூறுவது என்ன?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படையெடுப்புக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட வட கொரிய ராணுவ வீரர்கள் 6000 பேர் உயிரிழந்ததாக இங்கிலாந்து பாதுகாப்பு உளவுத்துறை தகவல் அளித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை ரஷ்யாவி... மேலும் பார்க்க

Ukraine: "போர் நிறுத்த முயற்சிகளின் மீது எச்சில் துப்பிய ரஷ்யா" - ஜெலன்ஸ்கி ஆவேசம்

உக்ரைன் மீது கடந்த ஜூன் 15ம் தேதி ரஷ்யா நடத்திய தக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி. நாட்டின் மின்சாராக் கட்டமைப்புகள் மீதான புதின் ராணுவத்தின் தாக்குதலை, "அமைதியை ... மேலும் பார்க்க