2வது நாளாகச் சரிந்த பங்குச் சந்தை!
ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளுக்கு முன்னதாக பங்குச் சந்தை வணிகம் 2வது நாளாகச் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 213 புள்ளிகளும் நிஃப்டி 23600 புள்ளிகளுக்கு மேலும் சரிந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழு புதன்கிழமை ஆலோசனையைத் தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த ஆலோசனை பிப். 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.