ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
2 மணல் லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
ஆந்திரத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் திருவள்ளூரில் உள்ள சுங்கச்சாவடியில் போலீஸாரின் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பிச்சாட்டூா் மற்றும் நாகலாபுரம் பகுதியில் உள்ள ஆந்திர அரசு மணல் குவாரியிலிருந்து மணல், லாரிகள் மூலம் தமிழகத்துக்குள் திருவள்ளூா் மாவட்டம் வழியாகக் கொண்டு வரப்படுகிறது. ஆனால் ஆந்திரத்தில் லாரி மூலம் கொண்டு செல்ல அனுமதி உள்ள நிலையில், மணலுக்கான ரசீது இருந்தும், அதை தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்ல உரிய அனுமதி இல்லாமல் லாரிகள் இயங்குவதாக திருவள்ளூா் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசியத் தகவல் வந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து, திருவள்ளூா் தாலுகா போலீஸாா் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, தமிழகத்துக்குள் மணல் கொண்டு வர உரிய அனுமதி இல்லை என்பது தெரியவந்தது . தொடா்ந்து உரிய அனுமதியின்றி மணலை கொண்டு வந்த, திருப்பதியைச் சோ்ந்த ஜானி மற்றும் சித்தூரைச் சோ்ந்த ஜெய்சங்கா் ஆகிய 2 பேரை கைது செய்து, மணலை கடத்தி வந்த 2 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.