What to watch on Theatre & OTT: விடாமுயற்சி, Thandel -இந்த வாரம் என்ன பார்க்கலாம...
2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? ஷுப்மன் கில் பதில்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இதையும் படிக்க:ஃபீல்டிங்கில் சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்..!
முழங்கால் வீக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. இதனால், நாளை மறுநாள் (பிப்ரவரி 9) கட்டாக்கில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஷுப்மன் கில் பதில்
விராட் கோலி நன்றாக இருப்பதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் அணியில் இடம்பெற்று விளையாடுவார் எனவும் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
![](https://media.assettype.com/dinamani/2024-07/8b924c25-d6af-4fef-915f-8aa3e5395637/GRlJ4FGWsAAyaxG.jpg)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலிக்கு பயப்படும்படியான அளவுக்கு ஒன்றுமில்லை. முதல் போட்டி தொடங்குவதற்கு முதல் நாள் அவர் நன்றாக பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், போட்டியன்று காலை அவருக்கு முழங்காலில் வீக்கம் ஏற்படவே, விளையாட முடியாமல் போனது. அவர் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக விளையாடுவார் என்றார்.