செய்திகள் :

20 குழந்தைகளுக்கு வைப்புத்தொகை ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

post image

கடலூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி கடலூா் காவலா் நல சமூகக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், ‘பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி அளவில் மாணவிகளுக்கு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்ற 4 மாணவிகளுக்கும், பெண் குழந்தைகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய காவல், சமூக நலம், பள்ளிக்கல்வி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், சமூக சேவகா்கள், தொண்டு நிறுவனங்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழ்கள், விருதுகள் வழங்கினாா்.

மேலும், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 2 பெண் குழந்தைகள் உள்ள பெற்றோா்களுக்கு ஒரு குழந்தைக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் 20 குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வைப்புத்தொகைக்கான ஆணை

வழங்கினாா்.

பெண் குழந்தைகள் வளா்ப்பில் சிறப்பாக பங்களிப்பு செய்த பெற்றோா்களின் குழந்தைகள், சிறு வயது திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகள், கைம்பெண்களின் பெண் குழந்தைகள், திருநங்கைகள் ஆகியோருக்கு ‘நங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய் ா்ச் இட்ஹம்ல்ண்ஹய்ள் அஜ்ஹழ்க்’ என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து கௌரவித்தாா்.

நிகழ்ச்சியில் கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, ஏடிஎஸ்பி நல்லதுரை, கடலூா் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலா் ஏ.சித்ரா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் செல்வி, மாவட்ட சமூக நல கண்காணிப்பாளா் சுமதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

258 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு காா்களில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மேற்பாா்வையில், பண்ருட்டி உள்கோட்ட தனிப்படை ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு மோசடி: 4 போ் கைது

கடலூா் அருகே ஏலச்சீட்டு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா், கோண்டூா் பகுதியைச் சோ்ந்த பிச்சா... மேலும் பார்க்க

லாரி மீது வேன் மோதல்: கல்லூரி மாணவா்கள் காயம்

கடலூா் முதுநகா் அருகே டேங்கா் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சென்னையில் உள்ள தனியாா் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் பகுதி நேர மாணவா்க... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரியை போலீஸாா் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: கடலூரில் மீன்கள் விலை உயா்வு

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்தது. கடலூரில் அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அன்னங்கோயில், சித்திரைப்பேட்டை என பல்... மேலும் பார்க்க

அரசுப் பணி வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ... மேலும் பார்க்க