செய்திகள் :

2002ல் கவுன்சிலர்களைத் தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

post image

சென்னை: கடந்த 2002ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் மா. சுப்பிரமணியனை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வி.எஸ். பாபு, முன்னாள் உறுப்பினர்கள் தமிழ்வேந்தன் உள்பட 6 பேர் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சாட்சியமளித்தவர்கள் பிறழ் சாட்சியமாக மாறியதாலும், குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று கூறியும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக கவுன்சிலர்களைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், 70க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் இன்று அமைச்சர் மா. சுப்பிரமணியனை விடுதலை செய்வதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

வழக்குத் தொடரப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதை முன்னிட்டு, மா. சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகியிருந்தார்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும்: அண்ணாமலை

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்று மாலை, மதுரை மாவட்டம் அ. வல்லாளப்பட்டி கிராமத்தில், பொதுமக்... மேலும் பார்க்க

சிக்னல் கோளாறு- மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக 1.30 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்... மேலும் பார்க்க

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்- கிரிக்கெட் வீரர் நடராஜன்

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து ... மேலும் பார்க்க

சீமான் கருத்து - நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

சீமான் தொடர்பான மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவில் இந்த உத்தரவு பிறப... மேலும் பார்க்க

தண்டனையை ஏற்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.சட்டப்பேரவை விவாதத்தின்போது, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப... மேலும் பார்க்க

இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் 9 நாள்கள் பொங்கல் விடுமுறை

கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் இவ்விரண்டு மாவட்ட மக்களுக்கும் பொங்கலுக்கு 9 நாள்கள் விடுமுறை கிடைத்திருக்கிறது.ஆருத்ரா தரிசனத்தையொ... மேலும் பார்க்க