இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
2015-ல் காவலரைத் தாக்கிய நபருக்கு 1 ஆண்டு சிறை!
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு காவலரைத் தாக்கிய நபருக்கு தற்போது 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவி மும்பை பகுதியில் அனகா விவேக் காளே என்ற பெண் தனது நண்பர்களுடன் அவர்களது காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருச்சக்கர வாகனத்தில் வந்த சைலந்திரா மகேந்திர சிங் என்பவர் அவர்களது காரின் முன்னால் வந்து வழியை மறித்துக்கொண்டதுடன் அவர்களை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அந்த பெண் காவல் துறையினரை உதவிக்கு அழைத்துள்ளார். அந்த அழைப்பின் அடிப்படையில் துணை காவல் ஆய்வாளர் சச்சின் ஹைர் அவரது படையினருடன் அங்கு சென்று அந்த பிரச்சனையைத் தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, சைலேந்திரா காவலர் சச்சினையும் தாக்கியுள்ளார்.
இதையும் படிக்க: மேற்கு வங்கம்: திரிணாமுல் காங். நிர்வாகி சுட்டுக்கொலை!
அதைத் தொடர்ந்து, அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது அதிகாரியைத் தாக்கியது, பெண்களிடம் இழிவாக நடந்துக்கொண்டது உள்பட பல்வேறு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது.
இந்நிலையில், தற்போது அவருக்கு எதிராக 5 பேரது வாக்குமூலங்கள் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதினால் அவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றங்களுக்கு ஏற்ப சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், தற்போது 50 வயதாகும் அவருக்கு அதிகபட்சமாக 1 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அபராதத் தொகையில் ரூ.3,000 பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், ரூ.1,000 காவல் அதிகாரி சச்சீனுக்கும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.