சிறகடிக்க ஆசை தொடருக்கு பெருகும் வரவேற்பு! இந்த வார டிஆர்பியில் அதிரடி மாற்றம்!
2023-24-இல் பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய்: ஏடிஆா் அறிக்கையில் தகவல்
புது தில்லி: கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஜனதாய சீா்திருத்தங்கள் சங்க (ஏடிஆா்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய தேசிய கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தோ்தல் ஆணையத்திடம் தேசிய கட்சிகள் சமா்ப்பித்த ஆண்டு கணக்குத் தணிக்கை அறிக்கையின்படி, 2023-24-ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் 50.96 சதவீதமான ரூ.2,211.69 கோடியை மட்டுமே அக்கட்சி செலவிட்டுள்ளது.
அந்த நிதியாண்டில் காங்கிரஸுக்கு ரூ.1,225.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், அதில் 83.69 சதவீதமான ரூ.1,025.25 கோடியை அக்கட்சி செலவிட்டுள்ளது.
அந்த நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடையில் பெரும் பகுதி தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் முன்பு இந்த நன்கொடை பெறப்பட்டது.
தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.1,685.63 கோடி, காங்கிரஸுக்கு ரூ.828.36 கோடி, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.10.15 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.