தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை...
2024-ல் இந்திய எல்லையில் 294 டிரோன்கள் பறிமுதல்: மத்திய அரசு தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 294 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியாநந்த் ராய் பஞ்சப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லையில் கடந்த ஓராண்டில் (2024) மட்டும் 294 டிரோன்களை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், எல்லையைக் கடந்து டிரோன் மூலம் மேற்கொள்ளப்படும் கடத்தல்களை தடுப்பதற்காக பஞ்சாப் எல்லையில் டிரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!
மேலும், டிரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை அலுவகம், இந்திய விமானப் படை மற்றும் அப்பகுதியின் காவல் துறை ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதனைத் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய எல்லைக்குள் வரும் ஆளில்லா விமானம் மற்றும் டிரோன்களின் வழித்தடத்தை கண்டறியவும் கடத்தல்காரர்களை பிடிக்கவும் எல்லைப் புறக்காவல் நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் ஆகியவை இரவு பகலாக முழு வீச்சில் செயல்பட்டுவருவதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.