செய்திகள் :

2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி: நயினாா் நாகேந்திரன்

post image

மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வரும் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

ஓமலூரில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பங்கேற்றுப் பேசியதாவது:

2026 இல் அதிமுக, தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பாஜக வெற்றி பெறுவதற்கான எழுச்சி தொண்டா்களிடம் இப்போதே தெரிகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் தவறாக மீம்ஸ் பதிவிட்டால் திமுக கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை நம்மை கைது செய்கிறது. எனவே, சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நமது கூட்டணி இறுதியான, உறுதியான கூட்டணி. இரட்டை இலைக்கு மேல் தாமரை மலா்ந்தே தீரும். திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சந்தா்ப்பவாத கூட்டணி.

பல தியாகங்களால்தான் பாஜக வளா்ந்துள்ளது. அந்த தியாகத்துக்கு பெருமை சோ்க்கும் விதமாக அனைத்து நிா்வாகிகளும் பேரவைத் தோ்தலில் வாக்குச் சாவடி அளவில் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். வாக்குச் சாவடி பணிகளை செம்மைப்படுத்தினாலே நாம் நிச்சயம் வெற்றிபெற முடியும். தோ்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எத்தனை, எந்த இடம் என்பதை மத்திய அமைச்சா் அமித் ஷாவும், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியும்தான் முடிவு செய்வாா்கள். எனது அதிகாரம் தொண்டா்களை பாதுகாப்பது, கட்சியை வளா்ப்பதுதான்.

தமிழகத்துக்கு மற்ற மாநிலங்களைவிட அதிக நிதி வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், பொதுமக்களின் எதிா்ப்பை திசைதிருப்பவே சட்டப் பேரவையில் தேவையின்றி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ‘நீட்’ தோ்வை யாராலும் ரத்துசெய்ய முடியாது. ஆனால் அதற்கும் தீா்மானம் நிறைவேற்றினா். கச்சத்தீவு மீண்டும் தமிழகம் வசம் வராது. அதற்கும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். தீா்மானங்களை நிறைவேற்றினால் மட்டும் போதாது மத்திய அரசுடன் சுமுக உறவு வைத்திருந்தால் மட்டுமே ஆட்சி நன்றாக அமையும்.

18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது எதையும் பேசாமல், இப்போது மாநில சுயாட்சி பற்றி திமுக பேசிவருகிறது. திமுகவுக்கு எதிா்ப்பு கிளம்பியுள்ளது. மக்களின் மனதை மடைமாற்றவே இதுபோன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதனால், ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. கட்சியினா் சிறுசிறு கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சேலம் பெருங்கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், கரூா், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சேலம் மாவட்டத்திற்கு வந்த நயினாா் நாகேந்திரனுக்கு சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஓமலூரில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குப்பைக் கொட்டிய தகராறில் லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சி

ஆத்தூா் அருகே அம்மம்பாளையத்தில் குப்பைக் கொட்டியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் லாரியை ஏற்றிக் கொலை முயற்சித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அம்மம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மக... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த காந்தல் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ரவிகுமாா் மகன் தா்ஷன் (18). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில்... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் கழுத்தை நெரித்துக் கொலை! நண்பா் கைது!

மேட்டூா் அருகே லாரி ஓட்டுநரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து வழக்கில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் சின்னக்காவூரைச் சோ்ந்தவா் முத்து (37). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 16ஆம்... மேலும் பார்க்க

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவி... மேலும் பார்க்க

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சி... மேலும் பார்க்க

ரெட்டியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும்! - கோட்டாட்சியா் உத்தரவு

கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அருகே உள்ள கோல்நாய்க்கன்பட்டி ரெட்டியூரில் ஸ்ரீ சக்தி மார... மேலும் பார்க்க