செய்திகள் :

`2026-ல் ஆட்சியில் அமர ஆளுநரும் அண்ணாமலையும் போதும்..!' - முதல்வர் ஸ்டாலின்

post image

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை அருகில் ஆவடியில் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். பெரியார் மண்ணில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. திருத்தணியைக் காக்கப் போராடியது போல இப்போது தமிழகத்தின் உரிமையைக் காக்கும் வகையில் குரல் கொடுக்க ஒன்று கூடியுள்ளோம். தமிழகத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சிக்கிறது. மத்திய நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கையாகத்தான் இருக்கிறது.

 ஸ்டாலின்
ஸ்டாலின்

இதில், தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே எதுவுமில்லை. உழவர்களின் 4 ஆண்டுக்காலப் போராட்டத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தத் திட்டமும் இல்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் இல்லை. ரயில்வேக்கு கூடுதல் நிதி இல்லை. மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்திற்கு நிதி இல்லை. பெஞ்சல், மிக்ஜாம் புயலுக்கு நிவாரணம் தரவில்லை. மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கவில்லை. கடன் தருகிறோம் என சொல்வது நியாயமா! மத்தியில் நடப்பது ஆட்சியா அல்லது வட்டிக் கடையா? தமிழகத்தைப் பிடிக்கவில்லை அதனால்தான் நிதி கொடுக்க மறுக்கிறார்கள்.

நீங்கள் நிதி தராமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் வஞ்சிப்பவர்கள். நாங்கள் வாழ வைப்பவர்கள். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடம் என்ன எதிர்பார்த்தாரோ... அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். தமிழக வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் கெட்ட நோக்கத்துடன் ஆளுநர் பேசி வருகிறார். தொழிற்சாலைகள் வெளி மாநிலத்திற்குப் போவதாக எந்த ஆதாரத்தில் பேசுகிறார். மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டுகிறது. ஆளுநர் பாராட்டு எங்களுக்குத் தேவையில்லை. நம்மை 2026-ல் ஆட்சியில் அமர வைக்க, ஆளுநரும், அண்ணாமலையும் போதும்.

அண்ணாமலை - தமிழ்நாடு ஆளுநர்

தமிழக வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. குழப்பம் ஏற்படுத்த முடியுமா எனப் பார்க்கிறார்கள். புதுப்புது பிரச்னையை கிளப்பி கலவரம், வன்முறை செய்யலாம் எனச் செயல்படுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழர் என்ற உணர்வோடு மக்கள் வாழ்கிறார்கள். முடிந்தவரைக்கும் தடையை ஏற்படுத்துங்கள். நாங்கள் அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம். உங்களுக்கும், உங்களுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க-வுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." எனப் பேசினார்.

Modi: "நீங்கள் ரோபோக்கள் அல்ல; தேர்வுதான் எல்லாம் என்று வாழக்கூடாது" - மாணவர்களுக்கு மோடி அறிவுரை

கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், 'பரிக்சா பே சார்ச்சா' என்ற தலைப்பில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) மாணவர்... மேலும் பார்க்க

Vijay : '2 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய மீட்டிங்' - விஜய், பிரஷாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி!

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். சந்திப்பின் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம்.விஜய்கட்சி தொடங்கி ஓராண்டை நிறைவு செய்யவிருந்த நிலை... மேலும் பார்க்க

”குடமுழுக்கா இல்லை திமுக கட்சிக் கூட்டமா?" - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைச் சாடும் பாஜக; பின்னணி என்ன?

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேஸ்வதானம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் குட... மேலும் பார்க்க

"பெரியாரை வீழ்த்தும் முயற்சி... மூக்குடைபட்டார்கள்" - முதல்வரை சந்தித்தபின் திருமாவளவன் பேட்டி

தலைமைச் செயலகத்தில் நடந்த, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சந்திரகுமார் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் தொல். திருமாவளவன். தொடர்ந்து முலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன... மேலும் பார்க்க

மாட்டு வண்டியில் வந்த எடப்பாடி; ஆப்சன்ட் ஆன செங்கோட்டையன் - அவிநாசி அத்திக்கடவு விழா துளிகள்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான, "அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றியதற்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி அத்திக்கடவு ... மேலும் பார்க்க