செய்திகள் :

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

post image

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார்.

இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், மத்திய பாஜக அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகளை முட்டுக்கட்டையிட்டு தடுத்துவிட்டு, மாநில அரசை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டதைப்போன்று முதல்வர் மமதா பானர்ஜி நாடகமாடுவதாக விமர்சித்தார்.

தொடர்ந்து தர்மேந்திர பிரதான் பேசியதாவது,

மேற்கு வங்கத்தில் கடந்த 2019 முதல் பாஜகவின் வாக்கு விகிதம் 30 - 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடுதலாக 10 சதவீத வாக்குகள் கிடைத்தால் மமதா பானர்ஜியை அதிகாரத்தில் இருந்து பாஜக இறக்கிவிடும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்திலுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களில் பாஜக வெற்றியைப் பதிவு செய்தது. மேற்கு வங்கத்தில் அடுத்து வரவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

ஆம் ஆத்மியின் தவறான வழிகாட்டுதலால் விழிப்படைந்த மக்கள், பாஜகவின் மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இனி இது மற்ற மாநிலங்களிலும் தொடரும் எனக் குறிப்பிட்டார் தர்மேந்திர பிரதான்.

அறிவுக்கும் தோ்வுக்கும் வித்தியாசம் உள்ளது: மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை!

‘அறிவுக்கும் தோ்வுக்கும் வித்தியாசம் உள்ளது’ என பிரதமா் மோடி திங்கள்கிழமை (பிப்.10) தெரிவித்தாா். பள்ளி மாணவா்களுக்கு தோ்வுகள் மீதான அச்சத்தை போக்கும் விதமாக ‘பரீக்ஷா பே சா்ச்சா’ நிகழ்ச்சி ஆண்டுதோற... மேலும் பார்க்க

பாதுகாப்பு அமைச்சகத்தின் 10,249 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு மாநிலங்களவையில் அரசு தகவல்!

நாடு முழுவதும் பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான 10,249 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று... மேலும் பார்க்க

சேவைகள் துறையில் 2 ஆண்டுகள் காணாத மந்தம்!

இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

3 மாநில தலைமைச் செயலா்களுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை!

ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்துகள் தொடா்பான சட்டவிரோத விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடா்பான வழக்கில் காணொலி வழியில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தில்லி, ஆந்திரம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் ... மேலும் பார்க்க

2026 மேற்கு வங்க தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை: முதல்வா் மம்தா பானா்ஜி

‘அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க போவதில்லை’ என்று அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி தெரிவ... மேலும் பார்க்க

மணிப்பூா் கலவரத்துக்கு பிரதமா் பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி

சென்னை: மணிப்பூா் மாநில கலவரத்துக்கு பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி கூறியுள்ளாா். அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்... மேலும் பார்க்க