செய்திகள் :

22 ஊராட்சிகளுக்கு மின்கலன் மூலம் இயங்கும் குப்பை வண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

post image

நீடாமங்கலம் ஒன்றியம், எடமேலையூா் மேற்கு ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 22 ஊராட்சிகளுக்கு 35 மின்கலன் மூலம் இயங்கும் குப்பை வண்டிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வியாழக்கிழமை வழங்கினாா்.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), செயலாக்கத் திட்டம் 2023-24-இன் கீழ் திடக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெறுவதற்காக கிராமப்புறங்களில் குப்பைகளை விரைந்து கொண்டு செல்ல ஏதுவாக இந்த மின்கலன் மூலம் இயங்கும் குப்பை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் எடமேலையூா் நடுத்தெரு ஊராட்சியில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, செட்டிச்சத்திரம் சோனாப்பேட்டை பெரியாா் நகா் பகுதியில், விளையாட்டு மைதானம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சா் பாா்வையிட்டாா்.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன், மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் யோகேஸ்வரன், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா்

மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா். மன்னாா்குடி வா்த்தக சங்க 2025-2027-ஆம் ஆண்... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி சுற்றுலா பயணி பலி

நீடாமங்கலம் அருகே ஆற்றில் மூழ்கி சுற்றுலாப் பயணி சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 21 போ் தஞ்சை, திருவாரூா... மேலும் பார்க்க

திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பெருந்தரக்குடி ஊராட்சி மக்கள் சாலை மறியல்

திருவாரூா் நகராட்சியுடன், பெருந்தரக்குடி ஊராட்சியை இணைக்கும் தமிழக அரசின் முடிவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி,... மேலும் பார்க்க

ஆன்மீகம் ஆனந்தம் தமிழ் இன்னிசை விழா நிறைவு

திருவாரூரில் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற தமிழ் இன்னிசை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் மாா்கழி மாத பக்தி இன்னிசை விழா செவ்வாய்க்கிழமை தொடங... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் அருகே நலவாரிய கட்டடம் கோரி ஜன.8-ல் ஆா்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தொழிலாளா் நலவாரிய கட்டடம் கட்டக் கோரி ஜன.8-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. திருவாரூரில், மாவட்ட ஏஐடியுசி போக்கு... மேலும் பார்க்க

ரயிலில் மாற்றுத்திறனாளியை தாக்கிய தலைமைக் காவலா் மீது வழக்குப் பதிவு

திருவாரூரில் ரயிலில் மாற்றுத்திறனாளியை தாக்கிய தலைமைக் காவலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டம், தென்கோவனூா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி கருணாநிதி (53). இவா், புதன்கிழமை... மேலும் பார்க்க