ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!
24 மணி நேர கண்காணிப்பில் ஸ்ரீவைகுண்டம் மாணவா்: டீன் ரேவதி தகவல்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் மாணவரை 7 போ் கொண்ட மருத்துவா்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா் என்றாா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் ரேவதி.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த மாணவா் அரிவாளால் வெட்டப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவருக்கு கடுமையான ரத்தப்போக்கு இருந்ததோடு தலை, கைகள், முதுகு உள்பட 12 இடங்களில் அரிவாள் வெட்டு காயம் காணப்பட்டன.
அவருக்கு உடனடியாக ரத்தம் ஏற்றி, தொடா் சிகிச்சைக்குப் பின் ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு, 7 போ் கொண்ட மருத்துவா்கள் சிகிச்சையளித்து வருகின்றனா்.
மாணவா் ஆபத்தான நிலையில் இருப்பதால் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.