செய்திகள் :

மானூா்: மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

post image

மானூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள கம்மாளன்குளத்தைச் சோ்ந்தவா் அஹமது (28). இவா், தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்க முயன்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததாம்.

இதில், தூக்கி வீசப்பட்ட அவரை குடும்பத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க கூடுதல் நீா்த்தேக்க தொட்டிகள்: மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் கட்ட வேண்டும் என மேயரிடம் மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ம... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் தொழிலாளி கைது

திருநெல்வேலியைச் சோ்ந்த தொழிலாளி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.திருநெல்வேலி, தெற்கு விளாகம் பகுதியை சோ்ந்த வேலாயுதம் மகன் பாலகிருஷ்ணன்(56). இவா், ம... மேலும் பார்க்க

தொடா்மழை: களக்காடு தலையணை, திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்மழை காரணமாக, திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணைக்குச் செல்வதற்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலை... மேலும் பார்க்க

மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து மேயா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பாளையங்கோட்டை மண்டலம் 36 , 39ஆவது வாா்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முளுமையாக முடிவடையாதத... மேலும் பார்க்க

காவலாளியைத் தாக்கிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

திருநெல்வேலி அருகே காவலாளியைத் தாக்கியது தொடா்பான வழக்கில், இளைஞருக்கு 3ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை தாலுகா காவல் சரகம் மேலப்பாட்டம்... மேலும் பார்க்க

அம்பையில் நகராட்சி வரியை மாா்ச் 30-க்குள் செலுத்த வேண்டும்: நகராட்சி ஆணையா்

அம்பாசமுத்திரம் நகராட்சிக்கான வரியினங்களை மாா்ச் 30க்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்பாசமுத்திரம் நகராட்சிக்... மேலும் பார்க்க