பணகுடி அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள பாம்பன்குளம் கிராமத்தில் சாலையோர டீக்கடை மீது இஸ்ரோ ஊழியா்கள் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
காவல்கிணறில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு திருநெல்வேலியில் இருந்து பணியாளா்களை ஏற்றிச்சென்ற பேருந்து, பாம்பன்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர டீக்கடை மீது மோதியது.
இதில், அங்கு டீ குடித்துக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளிகள் ஜெயகிருஷ்ணன்(58), குணசேகரன்(65) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை பணகுடி போலீஸாா் மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு குணசேகரன் உயிரிழந்தாா்
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.