27 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் புக்கோவ்ஸ்கி! பந்து தாக்கியதில் நிலைகுலைந்தவர்!
கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணி வீரர் வில் புக்கோவ்ஸ்கி, மூளையதிர்ச்சி காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாக விடைபெற்றார்.
ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவந்த வில் புக்கோவ்ஸ்கி ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டார்.
விக்டோரியா அணிக்காக 2 இரட்டை சதங்கள் அடித்ததால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் புகோவ்ஸ்கி தேர்வு செய்யப்பட்டார். வில் புக்கோவ்ஸ்கி 2021 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகமானார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்து வில் புக்கோவ்ஸ்கி தலையில் பயங்கரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மைதானத்தில் அப்படியே நிலைகுலைந்தார். இதையடுத்து அவருக்கு ஒன்பது கட்டங்களாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் மெரிடித் வீசிய பந்து வில் புக்கோவ்ஸ்கியின் தலையில் மீண்டும் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்தார். இதனால், மிகவும் பாதிக்கப்பட்ட வில் புக்கோவ்ஸ்கி பல்வேறு மருத்துவர்களின் ஆலோசனைபடி நிரந்தரமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இதுபற்றி 27 வயதான வில் புக்கோவ்ஸ்கி கூறுகையில், “பந்து தாக்கியதற்கு பின்னர் நடப்பதற்குகூட மிகவும் சிரமமாக இருந்தது. இதற்குபிறகு கிரிக்கெட்டில் இருந்து விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை. இதனால், நான் தூங்கிக்கொண்டுதான் இருந்தேன்” என்றார்.
விக்டோரியா அணிக்காக 36 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள வில் புகோவ்ஸ்கி 45.19 சராசரியுடன் 7 சதங்கள் உள்பட 2,350 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 255* ரன்கள் குவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டில் தனது முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான வில், ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் லீக்கில் விளையாடியிருந்தாலும், இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.
இதையும் படிக்க: ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!
27 YEAR OLD WILL PUCOVSKI RETIRED FROM CRICKET.
— Sachin sharma (Sports and political journalist) (@72Sachin_sharma) April 8, 2025
Will Pucovski ~ "The simple message is, I won't be playing cricket at any level again." #willpucovski#CricketTwitter#CricketNews#cricketupdatespic.twitter.com/6mniHDnlNN