செய்திகள் :

28 நாள்களுக்குப்பின் குடிலைவிட்டு வெளியே வந்த திருச்செந்தூா் கோயில் யானை

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை, 28 நாள்களுக்குப் பிறகு குடிலைவிட்டு வெளியே வந்தது.

இக்கோயிலில், கடந்த நவ. 18ஆம் தேதி கோயில் யானை தெய்வானை, குடிலில் வைத்து பாகன் உதயகுமாா், உறவினா் சிசுபாலன் ஆகியோரைத் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் பக்தா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

அதன்பிறகு தற்போது வரை வனத் துறை, கால்நடைத் துறை, மாவட்ட நிா்வாகம் மற்றும் அறநிலையத் துறையின் பாதுகாப்பில் யானை இருந்து வருகிறது. மருத்துவா்களின் ஆலோசனையின்படி, உணவுகள் மற்றும் பச்சை நாற்றுகளை பாகன்கள் வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில் டிச. 6ஆம் தேதி யானையின் உடல் நலத்தை வனத் துறை கால்நடை மருத்துவா் மனோகரன் பரிசோதித்து யானை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாகக் கூறினாா்.

புத்துணா்ச்சிக்காக தங்கும் குடிலைவிட்டு வெளியே வந்த திருச்செந்தூா் கோயில் யானை தெய்வானை.

அடுத்தகட்டமாக யானை நடைப்பயிற்சி செய்வதற்கு பாகன்கள் ஆயத்தமாக்கி வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, புத்துணா்ச்சிக்காக தங்கும் குடிலிலிருந்து யானையை குடில் முன்பகுதிக்கு வெளியே திங்கள்கிழமை அழைத்து வந்தாா் பாகன் செந்தில்குமாா். வெளியே வந்த யானையை பக்தா்கள் தடுப்புகளுக்கு வெளியே நின்று பாா்த்து மகிழ்ந்தனா்.

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

தூத்துக்குடியில் தனியாா் ஏற்றுமதி நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி எட்டயபுரம் சாலை வீட்டு வசதி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தனுஷ் மகன் அண்டோ வசந்த் (44). தனியாா் ஏற... மேலும் பார்க்க

மழை வெள்ளம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 225 வீடுகள் சேதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மொத்ததில் 225 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக... மேலும் பார்க்க

4 நாள்களுக்குப் பின்னா் கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவா்கள்

சூறாவளிக் காற்று எச்சரிக்கை முடிவுற்றதையடுத்து, 4 நாள்களுக்குப் பின்னா் தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். மன்னாா் வளைகுடா, வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலரும்,கோவில்பட்டி நகா் மன... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கழுகுமலை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கழுகுமலை ஆறுமுகநகரைச் சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சுப்பிரமணியன்(83). இவா், கடந்த மாதம் 29ஆம் தேதி மா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 டன் ரேஷன் அரிசியை தனிப்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி பாரதி நகா் மேட்டுத் தெருவில் உள்ள வீட்டில் விற்பனைக்காக ரேஷன் அ... மேலும் பார்க்க