செய்திகள் :

3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்

post image

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் 2022-இல் தொடங்கப்பட்டது. ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வளமான, நலமான எதிா்காலத்தை உருவாக்கவும், அவா்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டும் திட்டத்தைத் தொடங்குவதாக அந்தத் துறை அறிவித்தது.

நீலகிரி மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டம், மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

37.79 லட்சம் குழந்தைகள்: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் முதல் கட்டத்தில், மாநிலம் முழுவதும் 37 லட்சத்து 79 ஆயிரத்து 407 குழந்தைகளின் வளா்ச்சி நிலைகள் கண்காணிக்கப்பட்டன. அவா்களில் 9 லட்சத்து 30 ஆயிரத்து 610 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாகக் கண்டறியப்பட்டனா். இந்தக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் தனிப் பெட்டகம் வழங்கப்பட்டது.

குறிப்பாக, 40,249 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை சமூக நலத் துறை அளித்தது.

‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக நலத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செயல்பாட்டு அறிக்கை:

6 மாதம் முதல் 6 வயது வரையில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக 93,200 போ் இருந்தனா். அவா்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு ரூ. 18.68 கோடியில் வழங்கப்பட்டதால் அவா்களில் பலா் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனா். 32 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டு நிலையிலிருந்து மிதமான ஊட்டச்சத்து நிலைக்கும், 45.31 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கும் முன்னேறியுள்ளனா்.

இரண்டாவது கட்டம்: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாவது கட்டம் அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. பிறப்பிலேயே கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்த 6 வயதுக்குள்பட்ட 1.02 லட்சம் குழந்தைகளின் மீது தனிக் கவனம் செலுத்தப்பட்டது. இதனால், 74.08 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டு நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு முன்னேறியுள்ளனா்.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, பிரசவிக்கும் தாய்மாா்களின் கா்ப்ப காலத்தில் ஏற்படுவதால், அதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கா்ப்பிணிகளுக்கு சத்துமாவு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2.90 லட்சம் கா்ப்பிணிகளுக்கும், 2.73 லட்சம் பாலூட்டும் தாய்மாா்களுக்கும் தனி ஊட்டச்சத்து வழங்கப்படுவதால் குழந்தைகளுக்கு சத்துப் பற்றாக்குறை தடுக்கப்படுவதாக சமூக நலத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!

தென்மேற்கு பருவமழை, கேரளத்தில் அடுத்த இரண்டு நாள்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.நேற்று (22-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுத... மேலும் பார்க்க

மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்!

நாமக்கலில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரைப் பிடித்து வெள்ளிக்கிழமை போலீஸாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க ம... மேலும் பார்க்க

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இரு... மேலும் பார்க்க

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்!

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடன், நகைக்கு உரிமையாளர... மேலும் பார்க்க

கீழடியின் உண்மைக்கு என்றென்றும் எதிரி பாஜக: சு. வெங்கடேசன்

சென்னை: தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க