செய்திகள் :

3 நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் செல்கிறார் அமித் ஷா!

post image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அஸ்ஸாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். மார்ச் 15ல் டெர்கானில் உள்ள லச்சித் போர்புகன் போலீஸ் பயிற்சி நிறுவனத்தைத் திறந்துவைக்க உள்ளார். அதன்பின்னர் மிசோரத்துக்குப் புறப்பட்டு, இரவு தங்குவதற்காக குவஹாத்திக்குத் திரும்புவார்.

மறுநாள் தில்லிக்கு திரும்புவதற்கு முன்பு ஏபிஎஸ்யு-வின் 57வது மாநாட்டில் உரையாற்றுவார். என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்க... மேலும் பார்க்க

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க