ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!
3-வது நாளாக சரிவில் பங்குச்சந்தை! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு!!
தொடர்ந்து 3-வது நாளாக பங்குச்சந்தைகள் இன்றும்(வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,820.76 என்ற புள்ளிகளில் தொடங்கியது. நண்பகல் 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 681.83 புள்ளிகள் குறைந்து 82,508.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 198.30 புள்ளிகள் குறைந்து 25,156.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் கிட்டத்தட்ட 1 சதவீதம் சரிந்தன. தற்போது வரை முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறை ரீதியாக நிஃப்டி ஐடி, ஆட்டோ உள்ளிட்ட துறைகள் அதிக இழப்பைச் சந்தித்து வருகின்றன.
டிசிஎஸ், எம்&எம், அப்போலோ, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் சார்ந்துள்ள நிலையில், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், நெஸ்லே, ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஏற்றம் கண்டுள்ளன.
ஆசிய பங்குச்சந்தைகளைப் பொருத்தவரை ஜப்பானின் நிக்கேய் 225, தென்கொரியாவின் கோஸ்பி பங்குச்சந்தைகள் செறிவுடன் வர்த்தகமாகி வரும் நிலையில் சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ், சீனாவின் ஷாங்காய், தைவான், ஹாங்காங்கின் ஹாங்செங் உள்ளிட்டவை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.