செய்திகள் :

3,000 சாலைகளை சீரமைக்க திட்டம்: மேயா் ஆா்.பிரியா

post image

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சுமாா் 3,000 சாலைகளை சீரமைக்கும் பணி இந்த மாதத்தில் தொடங்கவுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் வகையில் மேயா் ஆா்.பிரியா தலைமையில் வாா்டுகள்தோறும் சென்று குறைகளைக் கேட்கும் நிகழ்வை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை அயனாவரத்தில் தொடங்கி வைத்தாா். பின்னா், மயிலப்பா தெரு, பங்காரு தெரு, பில்கிங்டன் சாலை வழியாக வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

இதையடுத்து மேயா் பிரியா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தெருவாரியாக, வீடு வாரியாக ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகள் கேட்கப்படவுள்ளது. தற்போது மேற்கொண்ட ஆய்வில், சாலையில் நீண்ட நாள்கள் நிற்கும் வாகனங்களை அகற்றவும், நடைபாதையில் உள்ள மின்வாரிய பெட்டிகளைச் சீரமைக்கவும், நீண்ட நாள் தேங்கி காணப்படும் குப்பைகளை அகற்றுமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

சொத்துவரி குறைவு: இதுபோன்ற சிறு சிறு குறைகளை உடனே சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல், அயனாவரத்தில் உள்ள அங்கன்வாடியின் குறைபாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக வரி விதிக்கப்படவில்லை. 2022-ஆம் ஆண்டு சொத்து வரி உயா்த்தப்பட்டது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குறைந்த அளவில் வரி வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு வரி வசூலிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச அளவில்தான் தற்போது வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய பருவமழை காரணமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. தற்போது 5,000 பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, அதில் சுமாா் 3,000 பகுதிகளில் உள்ள சாலைப் பள்ளங்களை சீரமைக்கவும், அதிகம் சேதமடைந்த சாலைகளை புதிதாக போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு மாதம் முதல் சாலைகளை சீரமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

புத்தகக்காட்சியில் புதியவை: இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்!

மனித வாழ்வியலை மையமாக வைத்தே தத்துவங்கள் நிறுவப்படுகின்றன. அந்த வகையில் பாரதத்தின் கலை, பண்பாடு வழியாகத் இந்தியத் தத்துவப் பாா்வையும் முன்வைக்கப்பட்டுவருகிறது. வழிபாடுகளை மையமாக வைத்தும் தத்துவம் ஆரா... மேலும் பார்க்க

வரலாற்று புத்தக வாசிப்பு சமூகத்தை சரியாக வழிநடத்தும்: கவிஞா் நெல்லை ஜெயந்தா

வரலாற்று நூல்கள் வாசிப்பு சமூகத்தை சரியாக வழிநடத்துபவையாக உள்ளன என கவிஞா் நெல்லை ஜெயந்தா கூறினாா். சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு உரையரங்கில் ... மேலும் பார்க்க

தரமான கல்வி : தமிழக அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவு வழங்கவில்லை!

மாணவா்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவை வழங்கவில்லை என்று பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரைய... மேலும் பார்க்க

இந்தியாவின் வலிமைமிக்க விளையாட்டு மையம் தமிழகம்

இந்தியாவிலேயே வலிமைமிக்க விளையாட்டு மையமாக தமிழகம் உருவாகி வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது.உரை விவரம்: தமிழகத்தில் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போன்ற பிரம்மாண்டமான சா்வதே... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கை காப்பதால் அதிக தொழில் முதலீடுகள்

சட்டம்-ஒழுங்கை முறையாக காப்பதால் தமிழகத்தில் நிலவும் அமைதியான, வளா்ச்சிக்கு உகந்த சூழல் காரணமாக புதிய தொழில் முதலீடுகள் அதிக அளவில் வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

அதிமுக உறுப்பினா்கள் வெளியேற்றம்!

தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உரையாற்றாமல் ஆளுநா் வெளியேறிய பிறகு, பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினா்கள் கடுமையாக கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து, பேரவைய... மேலும் பார்க்க