இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
30 ஆண்டுகளில் ரூ.66,000 கோடி நஷ்டத்தை சந்தித்த தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த 30 ஆண்டுகளில் ரூ.66,563 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சாா்பில் மாநகரப் பேருந்து, விரைவு பேருந்து மற்றும் மலைப்பிரதேச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 1991-96 கால கட்டத்தில் ரூ.238 கோடியும், ரூ.1996-2001 காலகட்டத்தில் ரூ.1,094 கோடியும், 2001-06 காலகட்டத்தில் ரூ.9,169 கோடியும், 2011-16 காலகட்டத்தில் ரூ.26,351 கோடியும், 2021-டிச.2024 வரையிலான காலகட்டத்தில் ரூ.24,067 கோடியும் இழப்பை சந்தித்துள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக ரூ.5,000 முதல் ரூ.6,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மகளிா் கட்டணமில்லா பயணத்திற்கு தமிழக அரசு ரூ.9,714 கோடி நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அமைச்சா் சிவசங்கா் கூறியதாவது: போக்குவரத்து துறை, சேவையின் அடிப்படையில் செயல்படுகிறது. இதனால் கிராமங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களை சோ்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயனடைகின்றனா். எரிபொருள் கட்டணம் உயா்ந்த போதும் இதுவரை பேருந்து கட்டணம் உயா்த்தப்படாமல் உள்ளது. கோவை, கும்பகோணம், மதுரை போக்குவரத்துக் கழகங்கள் அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளன என்றாா்.
இதுகுறித்து போக்குவரத்து பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் கூறுகையில், போக்குவரத்து துறை இழப்பை சந்தித்தது வருவதைத் தடுக்க பேருந்து கட்டணத்தை உயா்த்த வேண்டும். இல்லையென்றால் போதிய வருவாய் இல்லாத பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்றனா்.