Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
3000 ஆண்டுகள் வழக்கம்; இறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளும் சீன மக்கள்- இதன் பின்னணி என்ன?
சீனாவில் இறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளும் சடங்குகளை இன்றும் ஒரு சில இடங்களில் பின்பற்றி வருகின்றனர்.
இந்த திருமணத்தை "பேய் திருமணம்" என்று அழைக்கின்றனர். திருமணம் ஆகாமல் இறந்த இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த திருமணங்கள் இறந்தவர்களுக்கானது என்று இருந்தது. ஆனால் சமீபத்தில் சிலர் உயிருள்ள ஒரு நபரை ஒரு சடலத்துடன் திருமணம் செய்து வைக்கின்றனர்.
இந்த கோஸ்ட் திருமணம், பாரம்பரிய திருமணங்களைப் போலவே வயது, குடும்பப் பின்னணி போன்றவற்றை பார்க்கின்றது, நகை, மாளிகை உட்பட வரதட்சணைகளை அஞ்சலி செலுத்தும் காகித வடிவத்தில் குறிப்பிட்டு திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்த திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகளின் இறுதிச்சடங்கு மற்றும் விருந்துகள் நடைபெறுகிறது. இறந்தவர்களின் விருப்பம் நிறைவேற வில்லை என்றால் தங்களுக்கு தீமை ஏற்படும் என்று பல சீன மக்கள் நம்புகின்றனர். இவ்வாறு பேய் திருமணம் நடத்துவதன் மூலம் இறந்தவர்களை சமாதானப்படுத்துவதாக நம்புகின்றனர்.
இந்த திருமணத்தின் இருண்ட பக்கங்கள்
பல ஆண்டுகளாக சீனாவின் சில பகுதிகளில் இந்த சடங்குகள் உருமாற்றம் அடைந்ததாக சான்றுகள் கூறுகின்றன. அதாவது உயிருள்ள ஒருவர் ஒரு சடலத்தை திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த சடங்கில் ஆபத்தான பக்கமும் உள்ளது. வியாபாரம் நோக்கத்தோடு சில கல்லறை கொள்ளையாளர்கள் இதனை செய்வதாக அறிக்கைகள் கூறுகின்றன.
2015 ஆம் ஆண்டில் ஒரு கிராமத்தில் 14 பெண்களின் சடலங்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டது. ஷான்சி மாகாணத்தில் கல்லறை கொள்ளையர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இந்த உடலை திருடியதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
2008 மற்றும் 2010 ஆண்டில் ஷாங்க்சியில் பேய் திருமணங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட ஷாங்காய் பல்கலைக்கழகத்தின் சீனத் துறைத் தலைவர் ஹுவாங் ஜிங்சுன் கூறுகையில், ஒரு சடலத்தின் அல்லது ஒரு இளம் பெண்ணின் எலும்புகள் அதிக விலைக்கு விற்பனையாவதால் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதாக கூறினார். இதனால் சடலங்களை விற்பனை செய்வது 2006 இல் தடை செய்யப்பட்டது. ஆனால் கல்லறை கொள்ளையர்கள் இதனை நிறுத்தவில்லை.

சடங்குகள் ஏன் வியாபாரமாக நடக்கிறது?
ஷான்சி போன்ற சீனாவின் சில மாவட்டங்களில் கொலைகள் அதிகம் நடந்ததாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் நிலக்கரி சுரங்கத்தில் அதிக எண்ணிக்கையிலான இளம் அல்லது திருமணம் ஆகாத ஆண்கள் வேலை செய்கிறார்கள். எனவே இங்கு இறப்பு அதிகம் நிகழும்.
குடும்பத்தை காப்பாற்ற வேலை செய்து இளம் வயதிலேயே இறந்த ஒரு மகனுக்கு இறந்த மணப்பெண்ணை கண்டுபிடிக்க அவர்கள் முயற்சிக்கும் போது, இதுபோன்ற வழிகளில் சிக்கி கொள்கின்றனர்.
துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு இதுபோன்ற பேய் திருமணங்கள் செய்து வைத்தால் அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஒரு இழப்பீடு கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
இந்த பேய் திருமணங்களுக்கு பின்னால் உள்ள அடிப்படை காரணமே இறந்தவர்கள் மறுபிறவியில் தங்களது வாழ்க்கையை தொடர்வார்கள் என்பது தான் என்று மருத்துவர் ஷுவாங் கூறுகிறார். எனவே வாழும் போது திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் இறந்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த பேய் திருமண சடங்கு!