31-க்குள் குடும்ப அட்டைதாரா்கள் விரல்ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள்அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முன்னுரிமை (டஏஏ) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (அஅவ) குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை முழுமையாகப் பெற உறுப்பினா்கள் அனைவரும் 31-ஆம் தேதிக்குள் அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று தங்களது குடும்ப உறுப்பினா்களின் விரல்ரேகை (ங்ஓவஇ) பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், விரல்ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினா்கள் வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில் வசித்து வந்தால், அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தங்களது ங்ஓவஇ விரல்ரேகை பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.