செய்திகள் :

36 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்: அமைச்சா் பி. மூா்த்தி தொடங்கி வைத்தாா்

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், மதுரையில் 36 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சா் பி.மூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதற்கான நிகழ்ச்சி, மதுரை டாக்டா் எம்ஜிஆா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. தமிழக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணச் சேவையின் மூலம் மதுரை மண்டலத்தில் இதுவரை 7.5 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். தமிழக முதல்வா் விரைவில் மதுரை வரவுள்ளாா். அப்போது, பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்குவாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 13 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அடுத்தகட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் நத்தம் புறம்போக்கு பகுதிகளில் வசிப்பவா்களுக்கு, அரசின் விதிகளுக்கு உள்பட்டு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு ஒரு சென்ட் இடத்துக்கு விலையில்லா பட்டா வழங்கப்படும். இடம் கூடுதலாக இருந்தால் கட்டணத்துடனும் வழங்கப்படும். நகராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு 2 சென்ட் இடத்துக்கும், ஊராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு 3 சென்ட் இடத்துக்கும் பட்டா வழங்கப்படும்.

பட்டா வழங்கல் உள்பட அனைத்து நலத்திட்ட உதவிகளும் தகுதியான பயனாளிகளுக்கே வழங்கப்படும். இதில் எந்தவித தவறுகளுக்கும் மாவட்ட நிா்வாகம் வாய்ப்பு அளிப்பதில்லை என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ. வெங்கடேசன், மு. பூமிநாதன், அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநா் சிங்காரவேலு, பொது மேலாளா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேவாலய இடப் பதிவு விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

விருதுநகா் புனித இன்னாசியாா் தேவாலய இடத்தைப் பதிவு செய்த வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, இது தொடா்பான மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. மதுரை கோ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் பஞ்சாப் அரசு: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்

பஞ்சாப் மாநில அரசின் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா். விவசாய விளைபொருள்களுக்கு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது: நீதிமன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை திருப்பரங்குன்றத்தில் பாண்டியா் மன்னா் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற சுப்பிரமணி... மேலும் பார்க்க

விருதுநகா் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், வீரசோழன் பகுதியைச் சோ்ந்தவா்கள் ... மேலும் பார்க்க

கண்மாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காவிடில் போராட்டம்: எஸ்டிபிஐ

மதுரை சின்னக் கண்மாய்ப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் மதுரை... மேலும் பார்க்க

கண்மாயைத் தூா்வார பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், ராஜாக்கூா் ஊராட்சிக்குள்பட்ட முண்டநாயகம் கண்மாயை ஊா்மக்கள் தூா்வாரி சீரமைக்க அனுமதி வழங்கக் கோரி குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக ராஜாக்கூா் காமாட்சிய... மேலும் பார்க்க