செய்திகள் :

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி!

post image

சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.

சீனாவில் இருந்து இந்த பொருள்கள் மிகவும் மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அலுமினியம் ஃபாயில் காகிதங்கள் மீது அடுத்த 6 மாதங்களுக்கு ஒரு டன்னுக்கு 873 அமெரிக்க டாலா் பொருள் குவிப்பு தடுப்பு வரியாக விதிக்கப்படுகிறது. மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் காந்தங்கள் மீது 35 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வேக்வம் ஃபிளாஸ்க் மீது டன்னுக்கு 1,732 அமெரிக்க டாலா், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் மீது டன்னுக்கு 276 டாலா் வரி விதிக்கப்படுகிறது.

இந்த அமிலம் ஜப்பானில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுவதால் அந்நாட்டில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கும் இந்த வரி பொருந்தும்.

வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தக விவகாரங்கள் தீா்வுப் பிரிவின் பரிந்துரையின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சீனாவில் இருந்துதான் பெருமளவிலான மலிவு விலைப் பொருள்கள் இறக்குமதியாகின்றன.

எனவே, அந்நாட்டுப் பொருள்கள் மீதுதான் அதிக அளவு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு அதிக பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை வேலூா், மதுரை விமான நிலையம் உள்பட 4 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபான்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில், பகலில் பெரும்பாலான இடங்களில் வெ... மேலும் பார்க்க

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்தாா். சட்டப்பேரவையில் அந்தத் துறையின் மானிய... மேலும் பார்க்க

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் -அமைச்சா் ஐ.பெரியசாமி உறுதி

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி என்று உறுதிபடத் தெரிவித்தாா். ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீ... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு இன்று நிறைவு: ஏப்.19 முதல் விடைத்தாள் மதிப்பீடு

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 27) நிறைவு பெறவுள்ள நிலையில், தோ்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.19-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த ம... மேலும் பார்க்க

1-8 வகுப்புகளுக்கு இறுதித் தோ்வு: வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை

ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்.8 முதல் ஏப்.24 வரை நடைபெறவுள்ள நிலையில், இறுதித்தோ்வின்போது வினாத்தாள் விடைக்குறிப்புடன் கசிந்தால் சம்பந்தப்பட்ட மாவட... மேலும் பார்க்க

சென்னையில் மாா்ச் 28 ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னையில் மாா்ச் 28-ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெறுவதையொட்டி ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வ... மேலும் பார்க்க