செய்திகள் :

40 கேள்விகள்... 90 நிமிடங்கள்... கொடநாடு வழக்கில் ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனிடம் தீவிர விசாரணை!

post image

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடநாடு கொலை கொள்ளை வழக்கு அரசியல் ரீதியாக பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொடநாடு வழக்கு

அதன்படி  கொடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது.

இதையடுத்து சுதாகரன் விசாரணைக்காக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜரானார். விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பு அவர் வானத்தில் சூரியனை பார்த்து, சூரிய நமஸ்காரம் வைத்தபடி உள்ளே சென்றார்.

சுதாகரன்

அங்கு சுதாகரனிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன்,  கூடுதல் கண்காணிப்பாளர் முருகவேல், துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட சிபிசிஐடி குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதாகரன், “என்னிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு எனக்கு தெரிந்த பதில்களை தெரிவித்துள்ளேன். காவல்துறையினர் கேட்ட கேள்விக்கு எனக்கு தெரிந்த உண்மைகளை தெளிவாக கூறிவிட்டேன்.  தற்போதுதான் முதன்முறையாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன்.

சுதாகரன்

விசாரணை தீவிரமடைந்துள்ளதா.. உண்மை வெளிவருமா என்று எனக்கு தெரியவில்லை. விசாரணை முறையாக நடைபெறுகிறதா என்பதை நீங்கள் கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள்.” என்று கூறினார்.

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர்கள்.. ராமநாதபுரம் போலீஸார் விசாரணை; சிக்கியது எப்படி?

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதை மருந்துகள், கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. படகுகள் மூலம் கடத்தி செல்லப்படும் கஞ்சாவை இலங்கை கடற்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சிறுமி அழுதபடிவக... மேலும் பார்க்க

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க

திருப்பூர்: காதலியின் சாவில் மர்மம்; காதலனின் புகாரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா.22 வயதான வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 210 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் கைது; நடந்தது என்ன?

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, கஞ்சா கும்பலைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.சுபாஷ் சந... மேலும் பார்க்க