செய்திகள் :

42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

post image

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் (பனிச்சறுக்கு) சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று இந்திய வீரர் ஆனந்த்குமார் (22) வேல்குமார் இன்று (செப். 21) சாதனை படைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 42 கி.மீ. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்று ஸ்கேட்டிங்கில் இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன்பு, 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் ஸ்கேட்டிங் போட்டியில் சர்வதேச அளவில் இரு தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 42. கி.மீ. மாரத்தான் ஸ்டேட்டிங்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார் வேல்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதமூலம், ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இதே சாம்பியன்ஷிப் போட்டியில், 500 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!

Anandkumar Velkumar wins 42km marathon, becomes India's first double World Skating champ

மோடியும் ராகுலும் மக்களை பிரச்னைகளிலிருந்து திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள்: பிரசாந்த் கிஷோர்

மோடியும் ராகுலும் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.பிகாரில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ள அரசியல்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) தெரிவித்தார். சர்வதேச நாடுகளின் பொருள்களுடன் போட்டிபோடும் வகையில் உள்நாட்டுத் தயாரிப்புகள் ... மேலும் பார்க்க

வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி

நாட்டில் இதுவரை 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்திய பொருளாதாரத்த... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தல்

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நன்ஹி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் காணாமல் போ... மேலும் பார்க்க

ரூ. 5000 கோடி மதிப்பிலான 13 திட்டங்களுக்கு நாளை அடிக்கல்!

அருணாசலப் பிரதேசத்தில் ரூ. 5000 கோடி மதிப்புடைய 13 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப். 22) அடிக்கல் நாட்டவுள்ளார்.இதனைத் தொடர்ந்து மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்தி... மேலும் பார்க்க

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிமை காலை 6:41 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6ஆகப் ப... மேலும் பார்க்க