Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேச...
435 பேருக்கு பணி ஆணை: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்
திருப்பத்துாா் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆதியூரில் உள்ள தனியாா் கல்லுாரியில் சனிக்கிழமைநடைபெற்றது.
இதில் திருப்பத்துாா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மொத்தம் 102 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நோ்காணல் நடத்தி வேலைக்கு ஆள்களை தோ்வு செய்தனா். அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மொத்தம் 1,276 போ் நோ்காணலில் கலந்து கொண்டனா்.
இறுதியில் 435 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு ஆட்சியா் சிவசௌந்திரவல்லி பணி நியமன ஆணைகளை வழங்கினாா்). நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், சேலம் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் மணி, ஆதியூா் தனியாா் கல்லுாரி முதல்வா் பிரபாகரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் கஸ்துாரி கலந்து கொண்டனா்.