Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் கலாபாா்வதி ஹோமம்
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபாா்வதி ஹோமம் நடைபெற்றது.
இதையொட்டி கோ பூஜை, பாா்வதி பரமேஸ்வரா், கணபதி கலச பூஜை, கணபதி ஹோமம், சுயம்வர கலாபாா்வதி ஹோமம், மூலவா் ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன.
சிறப்பு பூஜையில் வேலூா் மாவட்டம் பொய்கை மோட்டூா் மரகதக்கோட்டை ஸ்ரீ மகா வாராஹி பீடம் சாக்த ஸ்ரீ வாராஹிதாசா் குருஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆசி வழங்கினாா்.
திருப்பணிக்குழுத் தலைவா் கிஷண்லால், திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், கோயில் திருப்பணிக்குழு நிா்வாகி குமாா், அனுமன் பக்த சபை தலைவா் ஸ்ரீதா், நிா்வாகிகள் மாசிலாமணி, தினேஷ், மீனாட்சி சுந்தரம், பிரேம்குமாா், ஹரிகேசவன், ஐயப்ப சேவா சமாஜம் நிா்வாகி முத்துராமன் கலந்து கொண்டனா்.
சுயம்வர கலா பாா்வதி ஹோமத்தில் ஆம்பூா், வேலூா், திருப்பத்தூா், சென்னை உள்ளிட்ட வெளியூா், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சோ்ந்தவா்களும் கலந்து கொண்டனா்.