Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
மாா்ச் 19-இல் வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்
வாணியம்பாடி வட்டம், வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டள செய்திக்குறிப்பு:
வாணியம்பாடி வட்டத்துக்குள்பட்ட வெலத்திகாமணிபெண்டா ஊராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் வரும் புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9 முதல் வியாழக்கிழமை காலை 9 மணி வரை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தங்கி இருந்து ஆய்வு செய்ய உள்ளாா்.
எனவே, வாணியம்பாடி வட்டத்துக்குள்பபட்ட பொதுமக்கள் மட்டும் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்திலும், அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகத்திலும் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
மேலும் வெலத்திகாமணிபெண்டா ஊராட்சியில் நேரடியாகவும் மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.