Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்
திருப்பத்தூா் அருகே அரசு கலைக் கல்லூரியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், கரியம்பட்டி அரசினா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற
கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி கோவிந்தராசு தலைமை வகித்தாா். டிஎஸ்பி-க்கள் சௌமியா (திருப்பத்தூா்), விஜயகுமாா் (வாணியம்பாடி), அரசு குற்றவியல் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் போக்ஸோ,இணையவழி குற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள், சைபா் குற்றங்களான டிஜிட்டல் கைது மோசடி, ஆன்லைன் வா்த்தக மோசடி, ஆன்லைன் முதலீடு மோசடி, அரசு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற்று தருவதாக மோசடி உள்ளிட்டவை குறித்தும், பெண்களுக்கு எதிரான சமூகவலைதள குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள்,பேராசிரியா்கள், போலீஸாா் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.