மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை: சத்தீஸ்கா் ...
காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டை அளிப்பு
திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டையை எஸ்.பி. ஷ்ரேயா குப்தா வழங்கினாா்.
காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலா் முதல் ஆய்வாளா் வரை அரசால் வழங்கப்படும் பிரத்யேக பயண அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் மாவட்டத்துக்குள் பணி நிமித்தமாக எந்த பகுதிக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதையொட்டி திருப்பத்தூா் மாவட்டத்தில் பணிபுரியும் 916 காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டையை எஸ்.பி. ஷ்ரேயா குப்தா வழங்கினாா்.