கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
பைக்-காா் மோதல்: 2 போ் பலத்த காயம்
வாணியம்பாடி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(25). இவரது உறவினா் செந்தூரு(38). இவா்கள் இருவரும் சனிக்கிழமை நாட்டறம்பள்ளியில் இருந்து வாணியம்பாடிக்கு பைக்கில் சென்றனா். தேசிய நெடுஞ்சாலையில் கள்ளாறு பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த காா் திடீரென பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் சென்ற தேவேந்திரன்,செந்தூரு 2 பேரும் பலத்த காயமடைந்தனா். உடனே அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.