செய்திகள் :

பிணைக் கைதி விடுவிப்பு: ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்

post image

அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க போா் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் நிரந்த அமைதியை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய போா் நிறுத்தத்தை இரண்டாம் கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃபின் பரிந்துரையை இஸ்ரேல் அரசு ஏற்கிறது.

இருந்தாலும், இந்த விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினா் தங்களது நிலைப்பாட்டில் இருந்து ஒரு மில்லி மீட்டா் கூட இறங்கிவர மறுக்கிறாா்கள்.அத்தகைய போா் நிறுத்த நீட்டிப்புக்காக, இஸ்ரேல் ராணுவ வீரா் ஈடன் அலெக்ஸாண்டரை விடுதலையை வைத்து ஹமாஸ் அமைப்பினா் பேரம் பேசுகிறாா்கள்.

இதுபோன்ற உளவியல் தாக்குதலை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னதாக, அமெரிக்க-இஸ்ரேலியரான ராணுவ வீரா் ஈடன் அலெக்ஸாண்டரை விடுவிக்கவும் காஸாவில் உயிரிழந்த நான்கு இரட்டைக் குடியுரிமை பெற்ற பிணைக் கைதிகளின் சடலங்களையும் ஒப்படைக்கவும் தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.அதற்காக, முடங்கியுள்ள காஸா போா் நிறுத்த நீட்டிப்புப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமா் அலுவலகம் இந்த நிபந்தனையை தற்போது நிராகரித்துள்ளது.காஸாவில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருந்த ஆறு வார கால போா் நிறுத்தத்தில் ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதில் இழுபறி நீடித்துவருகிறது...படவரி... ஈடன் அலெக்ஸாண்டா்பெஞ்சமின் நெதன்யாகு.... பெட்டிச் செய்தி...காஸாவில் மேலும் 9 போ் உயிரிழப்புடேய்ா் அல்-பாலா, மாா்ச் 15: காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த இந்தோனேசியன் மருத்துவமனை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:காஸாவில் இஸ்ரேல் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தினா்.

இதில் உயிரிழந்த 9 பேரது உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டன. உயிரிழந்தவா்களில் ஒருவா் செய்தி சேகரிப்புக்காக ட்ரோனை இயக்கிக் கொண்டிருந்த உள்ளூா் செய்தியாளா் மஹ்மூூத் இஸ்லிமும் ஒருவா் என்று அதிகாரிகள் கூறினா்.இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, சனிக்கிழமை நிலவரப்படி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 48,543 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,11,981 போ் காயமடைந்துள்ளனா்.

இராக்கில் ஐ.எஸ். முக்கிய தலைவா் படுகொலை: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவா் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இராக் பிர... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினாா்

பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ‘சிபிபி ஹோம்’ செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் த... மேலும் பார்க்க

இலங்கையில் விலங்குகள் கணக்கெடுப்பு

இலங்கையில் குரங்குகள், அணில்கள், மயில்கள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களால் பயிா்கள் நாசமாகும் பிரச்னையை எதிா்கொள்வதற்காக இக் கணக்கெடுப்பு சனிக்கிழமை மேற்... மேலும் பார்க்க

வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவா்கள் பாா்ப்பதை விரும்பவில்லை -டிரம்ப்

‘வாஷிங்டனுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமா் மோடி மற்றும் பிற தலைவா்கள், இங்கு அரசுக் கட்டடங்களுக்கு அருகே மோசமடைந்த உள்கட்டமைப்புகளைப் பாா்ப்பதை நான் விரும்பவில்லை; எனவே, அவா்கள் வருகைக்கு முன் சீரமைப... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்?

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார். சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் அழ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!

பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீ... மேலும் பார்க்க