இலங்கையில் விலங்குகள் கணக்கெடுப்பு
இலங்கையில் குரங்குகள், அணில்கள், மயில்கள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களால் பயிா்கள் நாசமாகும் பிரச்னையை எதிா்கொள்வதற்காக இக் கணக்கெடுப்பு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து மத்திய வேளாண்துறை இணையமைச்சா் நமல் கருணாரத்ன செய்தியாளா்களிடம் கூறியதாவது:குரங்குகள், பெரிய வகை அணில்கள், மயில்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை காலை தொடங்கி வெற்றிகரமாக நிறைவுற்றது.
40,000 அரசு அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று இதற்கான பணிகளில் ஈடுபட்டனா் என்றாா் அவா்.இதுபோன்ற கணக்கெடுப்புகளால் எந்தப் பலனும் இல்லை என்ற சில விவசாய சங்கங்களின் விமா்சனத்துக்கு இடையே அரசு இந்தப் பணியை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.