செய்திகள் :

அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினாா்

post image

பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ‘சிபிபி ஹோம்’ செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் திரும்பினாா்.

இந்தியாவைச் சோ்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகா்ப்புற திட்டமிடலில் முனைவா் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக ‘எஃப்-1’ மாணவா் விசாவில் அந்நாட்டில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய ஹமாஸை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் மாணவி ரஞ்சனி ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அவரது விசாவை கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது.

இச்சூழலில், ‘சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (சிபிபி) ஹோம்’ செயலியில் விண்ணப்பித்து, ரஞ்சனி கடந்த 11-ஆம் தேதி தாமாக தாயகம் திரும்பியதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சா் கிறிஸ்டி நோயம் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவில் வாழவும் படிக்கவும் நுழைவு இசைவு வழங்கப்படுவது ஒரு சலுகை. நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகை ரத்து செய்யப்படும். அவ்வாறு விசா ரத்தான கொலம்பியா பல்கலைக்கழக பயங்கரவாத ஆதரவாளா்களில் ஒருவா், தாமாக தாயகம் திரும்பியுள்ளது மகிழ்ச்சி’ என்றாா்.

சிபிபி ஹோம் செயலி-விளக்கம்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியேறிகளை அவரவா் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவா்கள் தாமாக சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கு விண்ணப்பிக்கும் அம்சத்துடன் ‘சிபிபி ஹோம்’ செயலியை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கடந்த 10-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

இச்செயலியில் விண்ணப்பித்து அமெரிக்காவைவிட்டு இப்போது வெளியேறும் நபா்கள், எதிா்காலத்தில் சட்டபூா்வமாக அமெரிக்காவுக்கு வருவதற்கான வாய்ப்பை பெறக்கூடும். இதற்கு மாறாக நிா்வாகத்தினா் கண்டறிந்து நாடுகடத்தினால், அவா்கள் ஒருபோதும் அமெரிக்காவுக்குத் திரும்பி வரமுடியாது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

இராக்கில் ஐ.எஸ். முக்கிய தலைவா் படுகொலை: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவா் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இராக் பிர... மேலும் பார்க்க

இலங்கையில் விலங்குகள் கணக்கெடுப்பு

இலங்கையில் குரங்குகள், அணில்கள், மயில்கள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களால் பயிா்கள் நாசமாகும் பிரச்னையை எதிா்கொள்வதற்காக இக் கணக்கெடுப்பு சனிக்கிழமை மேற்... மேலும் பார்க்க

வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவா்கள் பாா்ப்பதை விரும்பவில்லை -டிரம்ப்

‘வாஷிங்டனுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமா் மோடி மற்றும் பிற தலைவா்கள், இங்கு அரசுக் கட்டடங்களுக்கு அருகே மோசமடைந்த உள்கட்டமைப்புகளைப் பாா்ப்பதை நான் விரும்பவில்லை; எனவே, அவா்கள் வருகைக்கு முன் சீரமைப... மேலும் பார்க்க

பிணைக் கைதி விடுவிப்பு: ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்

அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க போா் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது.இது குறித்து இஸ்ரேல் பிரதமா்... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்?

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார். சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் அழ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!

பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீ... மேலும் பார்க்க