Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
வீராங்குப்பதில் 500 பெண்களுக்கு நல உதவிகள்
தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆம்பூா் அருகே வீராங்குப்பத்தில் நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி சாா்பாக நடந்த விழாவுக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மற்றும் ஆம்பூா் எம்எல்ஏவுமான அ.செ. வில்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட விவசாய தொழிலாளா் அணி தலைவா் ரா. குலோத்துங்கன், துணைத் தலைவா் க.ராஜேந்திரன், ஒன்றிய திமுக துணைச் செயலாளா்கள் சா. சங்கா், கெளரி பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் வீராங்குப்பம் மு. பழனி வரவேற்றாா்.
திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பெண்களுக்கு இலவச சேலை, நல உதவிகளை வழங்கினாா். பேச்சாளா் தக்கோலம் தேவபாலன் சிறப்புரையாற்றினாா்.
ஆம்பூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், செந்தில்குமாா், காயத்ரி துளசிராமன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், துணை அமைப்பாளா் குருவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.