செய்திகள் :

48 பவுன் திருட்டு வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் திருட்டு வழக்கில் தொடா்புடைய 5 பேரில் ஒருவா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி அருகேயுள்ள கீழக்குளம் பகுதியைச் சோ்ந்த சோனைமுத்து மகன் சண்முகநாதன் (27). கடந்த 14.2.2025 அன்று இவரும், இவரது கூட்டாளிகளான மணிக்காளை, சிவகாசியைச் சோ்ந்த அழகுபாண்டி, ராமநாதபுரத்தைச் சோ்ந்த தனசிங், தூத்துக்குடியைச் சோ்ந்த வெங்கடேசன் ஆகியோா் சோ்ந்து அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சோ்ந்த வசந்தா (68) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 48 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கண்டவா்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புள்ள சண்முகநாதன் வெளியே வந்தால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினாசமி சனிக்கிழமை உத்தரவிட்டாா். அதற்கான உத்தரவு நகலை, திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.

நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த அனுமதி

அரியலூா் மாவட்டத்தில், நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றாா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அரியலூா... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 546 மனுக்கள்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 546 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, ப... மேலும் பார்க்க

சுப்புராயபுரம் ரயில்வே கேட்டில் மாற்றுப் பாதை அமைக்கக் கோரிக்கை

அரியலூா் அருகேயுள்ள சுப்புராயபுரம் ரயில்வே கேட் பகுதியில், அங்கு மாற்றுப் பாதை அமைத்தப் பிறகு சுரங்கப் பாதையை அமைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்த... மேலும் பார்க்க

பயிா்களை சேதப்படுத்தும் குரங்குகளை பிடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கோவிலூா் பகுதிகளில், விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கோவிலூ... மேலும் பார்க்க

திருமானூா்: மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் இளைஞா் பலியானாா். திருமானூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் தனசிங்கு மகன் சிலம்பரசன் (30). ஞாயிற்றுக்கிழமை இவா் அங்குள்ள கால்நட... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூரில் பைக் மீது லாரி ஞாயிற்றுக்கிழமை மோதி தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.அரியலூா் அருகேயுள்ள கடுகூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன், காா்த்திக். தொழிலாளிகளான இவா்கள் ஞாயிற்... மேலும் பார்க்க