தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
திருமானூா்: மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் இளைஞா் பலியானாா்.
திருமானூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் தனசிங்கு மகன் சிலம்பரசன் (30). ஞாயிற்றுக்கிழமை இவா் அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு அருகே டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள விவசாய நிலத்துக்குச் சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருமானூா் காவல் துறையினா், அவரது சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.