செய்திகள் :

`5-வது அட்டெம்ப்ட்ல 1 மார்க்ல போயிடுச்சு; ஆனாலும்..!’ - UPSC தேர்வில் சாதித்த கிராமத்து நாயகன்

post image

`விடாமுயற்சி என்றும் வெற்றியை கொடுக்கும்' என நிரூபித்துக் காட்டியுள்ளார் தூத்துக்குடி மாவட்டம் மேலபனைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கதுரை, விஜயா தம்பதியினரின் மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட யு.பி.எஸ்.சி தேர்வில் 783-வது இடத்தைப் பெற்றுள்ளார். ஐந்து முறை அடைந்த தோல்விகளை, தனது ஆறாவது முயற்சியில் வெற்றியாக மாற்றிய பயணம் குறித்து பெலிக்ஸ் காபிரியேல் மார்க்கிடம் பேசினோம்.

பெலிக்ஸ் காபிரியேல் மார்க்
பெலிக்ஸ் காபிரியேல் மார்க்

"எங்க குடும்பத்தோட பூர்வீகத் தொழிலே விவசாயம்தான். பள்ளிப் படிப்பு எல்லாமே சாத்தான்குளம் ஹென்ரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலதான் படிச்சேன். எங்க ஊரு ஏரியா எல்லாமே கிராமம்தான். கல்லூரி வசதியெல்லாம் பெருசா இல்ல. அதனால சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில ஆட்டோ மொபைல் துறையில படிச்சேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆட்டோ மொபைல் சம்பந்தப்பட்ட படிப்பு, வாகனங்களெல்லாம் ரொம்ப புடிக்கும். காலேஜ்ல, யுனிவர்சிட்டில கோல்டு மெடல் ஃபர்ஸ்ட் ரேங் வாங்குனேன். 2019-ல காலேஜ் முடிச்சேன்.

என் வாழ்க்கையில வெற்றி கெடச்ச மாதிரி தோல்விகளையும் சந்திக்க ஆரம்பிச்சேன். கல்லூரி வாழ்க்கைக்கு அப்றம் என் வாழ்க்கை வேற மாதிரி மாறுச்சு. நிறைய கம்பெனி வாசல்ல நின்னுருக்கேன். ஆட்டோ மொபைல் சம்பந்தப்பட்ட பெரிய கம்பெனில வேலை பார்க்கனும்னு நிறைய ஆசைப் பட்டேன். ஆனால், எல்லா இடத்துலயும் அவங்க கேட்டது ரெக்கமன்டேசன்தான். படிப்பு, திறமை இருக்கானு பார்க்கல, என்ன பேக்கிரவுண்டுல இருக்கானுதான் பாத்தாங்க. காலேஜ் முடிச்சுட்டு எட்டு மாதம் வேலை பார்த்தன். அடுத்து வாழ்க்கையில என்ன பண்ண போறோம்னு நெறைய யோசிச்சேன்.

பெலிக்ஸ் காபிரியேல் மார்க்
பெலிக்ஸ் காபிரியேல் மார்க்

அந்த நேரத்துல எங்க அப்பாவுக்கு, ஊருக்கு வந்திருந்த கலெக்டரோட நடவடிக்கை, அவங்க இருக்குற இடம் பாத்து, நம்ம பையனும் இந்த இடத்துல இருக்கனும், படிச்ச படிப்புக்கு வேலை பார்க்க முடியாம கஷ்டப்பட கூடாதுனு எண்ணம் வந்துச்சு. அதை என்கிட்ட கேட்டாங்க, `நீ இப்டி யு.பி.எஸ்.சி எழுதுறியானு'. அப்பாகிட்ட கொஞ்சம் டைம் கேட்டேன். அதோட நான் பாத்துட்டு இருந்த வேலைய விட்டுட்டு வேற வேலை தேட ஆரம்பிச்சேன். யு.பி.எஸ்.சி பத்தின எந்த அவேர்னஸ் எனக்கு அப்போ இல்ல.

2019 லாஸ்ட்ல, யு.பி.எஸ்.சி பத்தி எல்லா டீடைல்ஸ்யும் கலெக்ட் பண்ண எல்லாம் தெரிஞ்சுக்க ஒரு அகாடமில ஜாய்ன் பண்ணேன். ஆனால், அந்த டைம்ல கொரோனா வந்துட்டு. அப்றம் தொடர்ந்து போக முடியல. வீட்டுல இருந்தே படிக்க ஆரம்பிச்சேன். ஆன்லைன்ல எல்லா அகாடமிலயும் ரிஜிஸ்டர் பண்ணேன். கவர்ன்மென்ட் வெப்சைட், நான் முதல்வன் ஸ்கீம், வீடியோஸ்னு எல்லாத்தையும் பயன்படுத்தி வீட்ல இருந்தே படிச்சேன். மூணு முறை முதற்கட்ட தேர்வுலயே வெளியேறுனேன். தொடர்ந்து மறுபடியும் படிச்சேன். நிறைய மாடல் எக்ஸாம் எழுதினேன்.

பெலிக்ஸ் காபிரியேல் மார்க்
பெலிக்ஸ் காபிரியேல் மார்க்

இரண்டு முறை நேர்காணல் வரை போனேன். லாஸ்ட் டைம் ஒரு மார்க்ல போயிடிச்சு. அப்பவும் எனக்கு எந்த மன தளர்ச்சியும் இல்ல. ஒரு மார்க்ல தானே போயிருக்கு, ரொம்ப பக்கத்துல வந்துட்டோம்னு நெனச்சு மறுபடியும் படிக்க ஆரம்பிச்சேன். ஐந்து முறை தோல்விகள் கொடுத்த அனுபவத்தால, இந்த முறை யு.பி.எஸ்.சி-ல அகில இந்திய அளவுல் 783-வது ரேன்க் வாங்கி வெற்றி பெற்றிருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு கொள்கை இருக்கு, `ஒரு முறை முடிவு எடுத்துட்டா அதுல வெற்றி கிடைக்குற வரை பின்வாங்க கூடாது. ஒருத்தருக்கு வாக்கு கொடுத்தா அதை நிறைவேற்றனும்னு'. என்னோட குறிக்கோள் அதுதான்.

எங்க அப்பா அம்மா எனக்கு குடுத்த சப்போர்ட் இல்லாம என்னால எதுவுமே பண்ணிருக்க முடியாது. ஐந்து வருசம் நான் படிச்சுட்டு இருந்த டைம்ல எனக்கு முழு சப்போர்ட் கொடுத்து என்ன ஊக்குவிச்சது என் அம்மா, அப்பாதான். நான் நல்ல நிலைமைக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டாங்க. எல்லா கஷ்டத்துக்கும் பலன் கிடைச்ச மாதிரி இருக்கு. இது ஒரு சிட்டியா இருந்துருந்தா இந்த வெற்றி என் குடும்பத்தோட முடிஞ்சுருக்கும். ஆனால், எங்க கிராமத்துல இது முதல் வெற்றி. அதனால மொத்த ஊர் மக்களுமே கொண்டாடிட்டு இருக்காங்க.

வெற்றி
வெற்றி

தினமும் பார்க்க வராங்க. இதே மாதிரி கிராமங்கள்ல இருக்குற நிறைய மாணவர்கள் இந்த மாதிரி தேர்வு எழுதி வெளிய வரணும் இன்றது என்னோட ஆசை. சிலபேர் கஷ்டபட்டு படிச்சு எல்லா படிகளையும் ஏறுவாங்க. வெற்றிக்கு பக்கத்துல இருக்கும்போது போதும்னு நின்னுறுவாங்க. அந்த மாதிரி மட்டும் பண்ணாதிங்க விடாமுயற்சியோட கடைசி வரைக்கும் ட்ரை பண்ணுங்க, கண்டிப்பா வெற்றி கிடைக்கும்" என்று கூறினார்.

10th All Fail: ``தேர்வில்தான் தோல்வி, வாழ்க்கையில் அல்ல'' - மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி ஊக்கம்

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த மகனை ஊக்கப்படுத்த, அவரின் பெற்றோர் கேக் வெட்டிக் கொண்டாடிய செயல் வைரலாகியிருக்கிறது.கர்நாடகாவிலுள்ள பாகல்கோட்டில் உள்ள பசவ... மேலும் பார்க்க

''படி ஏற முடியாதுன்னு யாரும் வேலை கொடுக்கல'' - மாற்றுத்திறனாளி தம்பதியரின் வாழ்க்கைப் போராட்டம்!

ஜெயலட்சுமி-முருகதாஸ் தம்பதியின் கதையைக் கேட்டால், இமைகள் கண்ணீருக்குள் மூழ்கி விடும். தன்னம்பிக்கையின் பிறப்பிடமாக திகழும் இவர்களின் இருப்பிடமும் இருள் சூழ்ந்த இவர்களின் வாழ்க்கையும் இரும்பு மனதையும் ... மேலும் பார்க்க

கடலூர்: தந்தையின் இறுதிச்சடங்கில் காதலியை மணந்த மகன்; நெகிழ வைத்த திருமணத்தின் பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம், கவணை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ் – கண்ணம்மாள்.இவர்களின் மகன் அப்புவும், அரசக்குழி கிராமத்தைச் சேர்ந்த விஜயசாந்தி என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கின்றனர... மேலும் பார்க்க

நியதி சேத்ரான்ஷ்: அன்று 3-வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை; ஆனால், இன்று...

பலநேரங்களில், நமக்கு எந்த வித தொடர்புமில்லாத, எங்கோ யாரென்ற தெரியாத ஒருவர் அடைகிற வெற்றி நமக்கு பெரும் தன்னம்பிக்கையைக் கொடுக்குமல்லவா? அதுவும் சிறுவயதிலேயே துன்பங்களைக் கடந்து ஒருவர் சாதித்தால்... அப... மேலும் பார்க்க

`அந்த உயிர்போனதுக்கு நானும் தான காரணம்' - யூடியூபரின் அந்த வீடியோவும், என் நினைவலைகளும்

அந்தப் பிரபல யூடியூபர்காரில் இருந்து மற்றவர்களுக்கு உதவி செய்ததையும், உதவி பெறுபவர்களின் இயலாமையைப் பார்த்து கேலி செய்து அதை வீடியோவாக பதிவிட்டு இருப்பதையும் பார்த்தேன். அந்த அதிர்ச்சியில்இருந்து மீள்... மேலும் பார்க்க