செய்திகள் :

5,348 நலவாழ்வு மையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

post image

தமிழகத்தில் உள்ள 5,348 நலவாழ்வு மையங்களில் புதன்கிழமைதோறும் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த 1978 முதல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது விரிவுபடுத்தப்பட்டு தற்போது 11 வகையான தடுப்பூசிகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இந்நடவடிக்கையின் மூலம் 12 வகையான நோய்களில் இருந்து குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளை காக்க முடிகிறது.

ஆண்டுதோறும் 9.58 லட்சம் கா்ப்பிணிகளுக்கும், 8.76 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ஒவ்வோா் ஆண்டும் 1.4 கோடி தவணை தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்படுகின்றன.

தினந்தோறும் முக்கிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதன்கிழமைதோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இதைத் தவிர 33 தனியாா் மருத்துவமனைகளிலும் தேசிய அட்டவணை தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்து இ-வின் செயலியிலும், பயனாளிகள் விவரங்கள் குறித்து யூ-வின் செயலியிலும் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் 4,848 ஊரக நலவாழ்வு மையங்களிலும், 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி தவணைகளை தவறவிடாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5,330 செலவில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள்!

தமிழகத்தில் ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து பலி!

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க