Anupama: ``சிம்ரன், அசினுக்கு நடந்ததுதான் அனுபாமாவுக்கு நடக்கிறது!'' - சுரேஷ் கோ...
5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதி..! லக்னௌ அணி உரிமையாளர் பகிர்ந்த விடியோ!
லக்னௌ அணி வீரர் திக்வேஷ் ரதி உள்ளூர் டி20 போட்டியில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது வைரலாகி வருகிறது.
இந்த ஐபிஎல் சீசனில் லக்னௌ அணியில் ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி தனது சிறப்பான பந்துவீச்சினாலும் விக்கெட் எடுத்தபிறகு ’நோட்புக் செலிபிரேஷன்’ கொண்டாட்டத்தினாலும் கவனம் ஈர்த்தார்.
தொடர்ச்சியாக இந்தக் கொண்டாட்டத்தினால் அபராதம் விதிக்கப்பட்டாலும் திக்வேஷ் அஞ்சாமல் அதைச் செய்து வந்தார்.
இந்தக் கொண்டாட்டத்தினால் தனது ஊதியத்தில் 30 சதவிகிதம் அபராதமாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்த திக்வேஷ் ரதி 8.25 எகானமியுடன் பந்துவீசினார்.
உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி எடுத்த 5 விக்கெட்டுகள் விடியோவை லக்னௌ அணியின் வீரர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 2025இல் உள்ளூர் போட்டியில் 7 விக்கெட்டுகள் 28 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.
உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி 5பந்துகளுக்கும் 5 விக்கெட்டுகள் எடுத்த இந்த விடியோவைப் பார்த்து வியந்தேன். ஐபிஎல் 2025-இல் லக்னௌ அணியில் நட்சத்திரமாக மாறுவதற்கான சிறிய முன்னோட்டம்தான் இந்த விடியோ என்றார்.
Stumbled upon this clip of Digvesh Rathi taking 5 in 5 in a local T20 game. Just a glimpse of the talent that made him a breakout star for @LucknowIPL in IPL 2025. pic.twitter.com/i8739cjxpk
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) June 16, 2025